naane varuven censore details released

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'நானே வருவேன்'. கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் செல்வராகவன் இயக்குவது மட்டுமல்லாமல், நடித்தும் உள்ளார். மேலும் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் ஸ்வீடன் நாட்டு நடிகை எல்லி அவ்ரம் மற்றும் இந்துஜா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

Advertisment

இந்நிலையில் 'நானே வருவேன்' படத்தை படக்குழு சென்சாருக்கு அனுப்பியுள்ளது. சென்சார் போர்ட் இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து புதிய போஸ்டர் ஒன்றையும் பகிர்ந்துள்ளார். இப்படம் வருகிற 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடதக்கது.

Advertisment