Advertisment

"இனி ரஜினியை விமர்சித்தால் பாரபட்சம் பார்க்காமல் பதிலடி கொடுக்கப்படும்"... கொந்தளித்த 'நான் சிரித்தால்' பட இயக்குனர்!

rajini

ஹிப்ஹாப் தமிழா ஆதி, ஐஸ்வர்யா மேனன் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான படம் 'நான் சிரித்தால்'. இப்படத்தினை அறிமுக இயக்குனர் ராணா இயக்கியிருந்தார். இவர் நடிகர் ரஜினிகாந்த்தின் தீவிர ரசிகர் ஆவார்.

Advertisment

தனது அரசியல் பிரவேசம் குறித்து உறுதிப்படுத்தியுள்ள ரஜினிகாந்த், அது தொடர்பான முழு விவரங்களையும் வரும் 31-ம் தேதி அறிவிக்கவுள்ளார். இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் வருகையை ஆதரித்தும், விமர்சித்தும், கேலி செய்தும் சமூக வலைதளங்களில் நிறைய மீம்ஸ்கள் வலம் வருகின்றன. இது ரஜினியின் ரசிகர்கள் மற்றும் அரசியல் விரும்பிகள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

இந்த நிலையில், ரஜினி குறித்த கேலி மீம்ஸ்களுக்கு இயக்குனர் ராணா தனது அதிருப்தியை காட்டமாக வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "ஒரு நல்ல மனிதன், நல்ல நோக்கத்துடன் வரும்போது, அவர் மீது வன்மம் உமிழ்ந்து கொண்டும், அவரின் மதிப்பை, எண்ணத்தை குறைத்து பேசிக்கொண்டும் இருப்பவர்களை கண்டு ஒதுங்கி இருக்க முடியாது. நாகரீகமான முறையில் தக்க பதிலடிகள் பாரபட்சம் பார்க்காமல் கொடுக்கப்படும்! இனி போர் நேரம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Actor Rajinikanth
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe