style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ரைட்டர் இமேஜினேஷன்ஸ் தயாரிப்பில் 'கயல்' சந்திரன் நடிக்கும் படம் 'நான் செய்த குறும்பு '. புதுமுக இயக்குநர் மகா விஷ்ணு இயக்கத்தில் உருவாகும் இப்படம் பூஜையுடன் நேற்று தொடங்கியது. இதைத்தொடர்ந்து நடந்த தொடக்க விழா நிகழ்ச்சியில் வழக்கமான விழாவாக இல்லாமல் வித்தியாசமானதாக விழா மேடையில் ஐந்து கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது. அப்பெண்மணிகள் ஐவரையும் மேடையில் அமர வைத்தனர். மங்கல இசை ஒலித்தது. வேத மந்திரம் முழங்கியது. கர்ப்பிணிப் பெண்களுக்கு மாலையிட்டு மஞ்சள் பூசி, சந்தனம் பூசி, குங்குமம் இட்டு,புது வளையல்கள் அணிவித்து அட்சதை தூவி, இனிப்புகள் ஊட்டினர். அவர்களுக்குப் பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டு படக் குழுவின் சார்பில் பெருமைப்படுத்தப்பட்டனர். இயக்குநர் மற்றும் படக் குழுவினர் வளைகாப்பு நடத்தப்பட்ட பெண்மணிகள் காலில் விழுந்து வணங்கினார்கள். மேலும் விழாவில் இயக்குநர் மகாவிஷ்ணு இப்படம் குறித்து பேசும் போது....
style="display:inline-block;width:336px;height:280px" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="3041061810">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
"நான் ஸ்டாண்ட் அப் காமெடி செய்து அசத்தப்போவது யாரு என்று சன் டிவியில் 9 ஆண்டுகள் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் இருந்தேன். சினிமா வந்து 3 ஆண்டுகள் ஆகின்றன. தமிழ் சினிமாவில் 1500 தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள். நான் அவர்களில் 900 பேரிடமாவது பேசியிருப்பேன். ஆனால் அவர்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால் பலரும் படம் எடுக்க வருவதில்லை. காரணம் தப்பான கதை, தப்பான படக் குழு, தப்பான மேனேஜர் என்று அமைந்ததால் தான். ஒரு நல்ல மேனேஜர் கொண்ட படக் குழு அமைந்து விட்டால் சினிமாவில் இழப்புக்கு இடமே இல்லை. எனக்கு அப்படி ஒரு குழு தற்போது அமைந்துள்ளது. 'நான் செய்த குறும்பு ' ஒரு ரொமாண்டிக் காமெடி சஸ்பென்ஸ் த்ரில்லர் குடும்பப் படம் என்று கூறலாம். இது பட்ஜெட் படம் தான், ஆனால் அதில் நம்ப முடியாத அளவுக்கு ரிச் குவாலிட்டி இருக்கும். தரம் இருக்கும்" என்றார்.
style="display:inline-block;" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9546799378">