துணை நடிகர் மோகன் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 60. கமலின் 'அபூர்வ சகோதரர்கள்', 'நான் கடவுள்' உள்ளிட்ட பல்வேறு படங்களில் துணை நடிகராகப் பணியாற்றியவர் மோகன். தொடர்ந்து திரைப்பட வாய்ப்பு கிடைக்காததால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு யாசகம் ஏந்தும் அளவுக்கு சென்றதாகக்கூறப்படுகிறது. மேலும் திருப்பரங்குன்றம் பெரியரத வீதியில் யாசகம் செய்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் மோகன் மறைந்திருப்பது திரைத்துறையினரிடையேசோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மோகனின் உடல் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு அவரது சொந்த ஊரான சேலத்திற்கு இலவச ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பிவைக்கப்படுகிறது. இவரது மறைவுக்கு திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.