Advertisment

இணையத்தில் வைரலாகும் எஸ்.ஏ.சந்திரசேகரின் 'நான் கடவுள் இல்லை'!

ndjdjd

Advertisment

பல்வேறு வெற்றிப் படங்களை இயக்கிய எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் 71வது படமாக உருவாகி இருக்கிறது 'நான் கடவுள் இல்லை' திரைப்படம். இப்படத்தைத்தனது சொந்த நிறுவனமான ஸ்டார் மேக்கர்ஸ் சார்பில் எஸ்.ஏ.சந்திரசேகர் தயாரிக்கிறார். இப்படத்தில் ஒரு தைரியமான போலீஸ் அதிகாரியாக நடிகர் சமுத்திரக்கனி நடித்திருக்கிறார். அவரது மனைவியாக நடிகை இனியாவும் மகளாகச் சிறுமி டயானா ஸ்ரீயும் நடித்திருக்கிறார்கள். எஸ்.ஏ. சந்திரசேகர், சாக்ஷி அகர்வால், அபி சரவணன், யுவன் மயில்சாமி, ரோகிணி, இமான் அண்ணாச்சி, மதுரை மாயக்கா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தில் வித்தியாசமான வில்லனாகப் பருத்திவீரன் சரவணன் நடித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

naan kadavul illai samuthirakani
இதையும் படியுங்கள்
Subscribe