Skip to main content

இணையத்தில் கவனம் ஈர்க்கும் வடிவேலு படத்தின் மோஷன் போஸ்டர்

Published on 10/12/2021 | Edited on 10/12/2021

naai sekar returns movie mostion poster goes viral

கடந்த 2006 ஆம் ஆண்டு இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் சுந்தர் சி நடிப்பில் வெளியான 'தலைநகரம்' படத்தில் நடிகர் வடிவேலு நாய் சேகர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் வெளியாகி நடிகர் வடிவேலுவின் நாய் சேகர் கதாபாத்திரமும், அவர் பேசும் நகைச்சுவை வசனங்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.  இதனைத் தொடர்ந்து இயக்குநர் சுராஜ் நடிகர் வடிவேலுவை வைத்து 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' என்ற படத்தை இயக்கவுள்ளார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, லைகா புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கிறது. சமீபத்தில்  இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டிருந்தது.

ad

'நாய் சேகர் ரிட்டன்ஸ்' படத்தின் பணிகள் நேற்று சென்னையில் பூஜையுடன் தொடங்கப்பட்ட நிலையில் படக்குழு தற்போது படத்தின் மோஷன் போஸ்ட்டரை வெளியிட்டுள்ளது. அதில் நடிகர் வடிவேலு நாய்களுடன் ஸ்டைலாக பைக்கில் வருவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது. சந்தோசம் நாராயணன் இசையுடன் வெளியான இந்த மோஷன் போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சார்ந்த செய்திகள்

Next Story

விஷாலின் மேல் முறையீட்டு மனு - உத்தரவிட்ட நீதிமன்றம் 

Published on 01/04/2024 | Edited on 01/04/2024
vishal lyca case update

நடிகர் விஷால் நடிப்பது மட்டுமின்றி 'விஷால் ஃபிலிம் ஃபேக்டரி' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் சார்பாக 'கோபுரம் ஃபிலிம்ஸ்' அன்புச்செழியனிடம் 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனாகப் பெற்றிருந்தார். இந்த கடன் தொகையை லைகா நிறுவனம் ஏற்றுக்கொண்டு செலுத்தியது. இது தொடர்பாக லைகா நிறுவனம் விஷாலிடம் மேற்கொண்ட ஒப்பந்தத்தில், கடன் தொகையை முழுமையாகத் திருப்பிச் செலுத்தும் வரை விஷால் தயாரிக்கும் அனைத்து படங்களின் உரிமையும் லைகா நிறுவனத்திற்கு வழங்கப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தது.

ஆனால் விஷால், கடன் தொகையைச் செலுத்தாமல் 'வீரமே வாகை சூடும்' படத்தை தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளில் வெளியிடும் பணிகளை மேற்கொண்டதாகவும், அந்தப் படத்தை வெளியிடவும், சாட்டிலைட், ஓடிடி ஆகியவற்றின் உரிமைகளுக்குத் தடை விதிக்கக் கோரியும் உயர்நீதிமன்றத்தில் லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்தது. அதில் தங்களுக்கு செலுத்த வேண்டிய கடனைத் திரும்பச் செலுத்த விஷாலுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ரூ. 21.29 கோடியில் ரூ. 15 கோடியை உயர்நீதிமன்றத்தில் விஷால் டெபாசிட் செய்ய உத்தரவிட்டிருந்தார். இந்தத் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தார் விஷால். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது உயர்நீதிமன்றம். 

இதையடுத்து பல கட்டங்களாக இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது. கடந்த முறை நடந்த விசாரணையில், உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஆஷா, ரத்னம் படத்திற்காக விஷால் வழங்க வேண்டிய நிலுவை சம்பளமான ரூ.2. 60 கோடியை நீதிமன்றத்தில் செலுத்த, அந்த படத் தயாரிப்பு நிறுவனமான ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்திற்கு உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து விஷால் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் சுந்தர் மற்றும் திலகவதி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், விஷாலின் மனுவிற்கு பதிலளிக்கும் படி லைகா நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளனர். மேலும் விசாரணையை வருகின்ற 3ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.

Next Story

விஷாலுக்கு அவகாசம் கொடுத்த நீதிமன்றம்

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
vishal lyca case update

நடிகர் விஷால் நடிப்பது மட்டுமின்றி 'விஷால் ஃபிலிம் ஃபேக்டரி' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் சார்பாக 'கோபுரம் ஃபிலிம்ஸ்' அன்புச்செழியனிடம் 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனாகப் பெற்றிருந்தார். இந்த கடன் தொகையை லைகா நிறுவனம் ஏற்றுக்கொண்டு செலுத்தியது. இது தொடர்பாக லைகா நிறுவனம் விஷாலிடம் மேற்கொண்ட ஒப்பந்தத்தில், கடன் தொகையை முழுமையாகத் திருப்பிச் செலுத்தும் வரை விஷால் தயாரிக்கும் அனைத்து படங்களின் உரிமையும் லைகா நிறுவனத்திற்கு வழங்கப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தது.

ஆனால் விஷால், கடன் தொகையைச் செலுத்தாமல் 'வீரமே வாகை சூடும்' படத்தை தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளில் வெளியிடும் பணிகளை மேற்கொண்டதாகவும், அந்தப் படத்தை வெளியிடவும், சாட்டிலைட், ஓடிடி ஆகியவற்றின் உரிமைகளுக்குத் தடை விதிக்கக் கோரியும் உயர்நீதிமன்றத்தில் லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்தது. அதில் தங்களுக்கு செலுத்த வேண்டிய கடனைத் திரும்பச் செலுத்த விஷாலுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ரூ. 21.29 கோடியில் ரூ. 15 கோடியை உயர்நீதிமன்றத்தில் விஷால் டெபாசிட் செய்ய உத்தரவிட்டிருந்தார். இந்தத் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தார் விஷால். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது உயர்நீதிமன்றம். 

இதையடுத்து பல கட்டங்களாக இந்த வழக்கு நடைபெற்று வந்தது. கடந்த முறை நடந்த விசாரணையில், இருவருக்கும் இடையிலான பண பரிவர்த்தனை செய்தது குறித்து ஆய்வு செய்வதற்காக ஆடிட்டர் ஸ்ரீகிருஷ்ணா என்பவரை நியமித்து மூன்று ஆண்டுக்கான வருமான வரி கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி ஆஷா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. விஷால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஆடிட்டர் சில கடிதங்களை கேட்டு தங்களது ஆடிட்டருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் அந்த கடிதம் தற்போது தான் கிடைத்திருப்பதால் அந்த ஆவணங்களை சமர்ப்பிக்க அவகாசம் கேட்டு கோரிக்கை வைத்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை மார்ச் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.