Advertisment

மிக்ஜாம் புயல் - களத்தில் இறங்கிய ‘நாடு’ படக்குழு

naadu movie team helped affected peoples by cyclonemichaung

Advertisment

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான அளவிற்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளைச் சார்ந்த மீட்புப் பணிக் குழுவினர் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகிறனர். மேலும் அவர்களுக்குத் தேவையான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், தாம்பரம் மற்றும் முடிச்சூர் பகுதி மக்களுக்கு நாடு திரைப்படத்தின் இயக்குநர் சரவணன் மற்றும் நடிகர் தர்ஷன் ஆகியோர் படகு மூலம் சென்று உணவு மற்றும் அடிப்படை தேவையான பொருட்களை வழங்கினார்கள். அப்போது அவர்கள் நாடு படத்தின் தலைப்பு பொருந்திய டி-ஷர்ட்டை அணிந்திருந்தனர். சரவணன் இயக்கத்தில் தர்ஷன், மஹிமா நம்பியார், சிங்கம் புலி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 1 ஆம் தேதி வெளியான படம் நாடு. சக்ரா மற்றும் ராஜ் தயாரித்திருந்த இப்படத்திற்கு சத்யா இசையமைத்திருந்தார்.

dharshan CycloneMichaung
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe