Advertisment

மீண்டும் சம்போ சிவ சம்போ?

samuthrakani

'நாடோடிகள்' படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இயக்குனர் சமுத்திரக்கனி நாடோடிகள் படத்தின் 2ஆம் பாகத்தை இயக்கிவருகிறார். மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் தயாரிக்கும் இப்படத்தில் சசிகுமார், அஞ்சலி இணைந்து நடித்துள்ளனர். மேலும் பரணி, அதுல்யா, எம்.எஸ்.பாஸ்கர், நமோ நாராயணன், ஞானசம்பந்தம், துளசி, ஸ்ரீரஞ்சனி, சூப்பர் சுப்புராயன், ராம்தாஸ்,மற்றும் சமுத்திரகனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் தென் மாவட்டங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் நிறைவடைந்துவிட்டதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக சமூக வலைத்தளத்தில் அறிவித்தது மட்டுமில்லாமல் அடுத்ததாக நாடோடிகள் படத்தின் 3ஆம் பாகமும் வரவிருப்பதாக சமுத்திரக்கனி அதிரடியாக அறிவித்துள்ளார். மேலும் விரைவில் இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் துவங்க இருப்பதாகவும், படத்தை ஆகஸ்டில் கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment
nadodigal2 samuthrakani
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe