Advertisment

திகட்டாத நா.முத்துக்குமார் கவிதைகள் - 'திகட்டத் திகட்ட' பாடல் வைரல்

na muthukumar lyrics Thikatta Thikatta Kadhalippom lyric video from Aneethi movie viral on youtube

Advertisment

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக் களத்தைக் கொண்டு படம் இயக்கி வருபவர் வசந்தபாலன். அந்த வகையில் 'ஜெயில்' படத்தைத்தொடர்ந்து அர்ஜுன் தாஸை கதாநாயகனாக வைத்து 'அநீதி' படத்தை இயக்கியிருக்கிறார். இப்படத்தில் அர்ஜுன் தாஸிற்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடிக்கிறார். இப்படத்தை இயக்குநர் வசந்தபாலன் தன்னுடைய பள்ளிக்கால நண்பர்களுடன் இணைந்து உருவாக்கியுள்ள 'அர்பன் பாய்ஸ் ஸ்டூடியோஸ்' நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் மூலம் வசந்தபாலன் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகிறார். வசந்தபாலனின் ஆஸ்தான இசையமைப்பாளரான ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="74a75335-f415-4a46-b620-add005a54b31" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/500-x-300_9.jpg" />

இந்நிலையில் 'அநீதி' படத்தின் முதல் பாடலான 'திகட்டத்திகட்டக் காதலிப்போம்' பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் இரண்டு லட்சம் பார்வையாளர்களைக் கடந்து யூ ட்யூப் ட்ரெண்டிங் லிஸ்டில் இடம் பெற்றுள்ளது. இப்பாடலின் வரிகள் மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் கவிதைகளிலிருந்து தொகுத்துள்ளார்கள். இதனை இயக்குநர் வசந்தபாலன் நா.முத்துக்குமாரின் நட்பின் நினைவாக உருவாக்கியுள்ளார். மெலடி காதல் பாடலாக வெளியாகியுள்ள இந்தப் பாடல் இளைஞர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

Advertisment

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 300க்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ளார் நா.முத்துக்குமார். சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை இரண்டு முறை வாங்கியுள்ளார். இவரது பாடல் வரிகள் மற்றும் கவிதைகள் இளைஞர் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் இன்றும் ரசிக்கப்பட்டு வருகிறது.

Actress Dushara Vijayan aneethi movie na muthukumar vasantha balan
இதையும் படியுங்கள்
Subscribe