Advertisment

'N4' படத்திற்கு கிடைத்த சிறந்த இயக்குநர் விருது; மகிழ்ச்சியில் படக்குழு!

movie

Advertisment

“மை சன் இஸ் கே” என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் லோகேஷ் குமார். முதல் படத்திலேயே பலரது கவனத்தை ஈர்த்த இவர், தனது இரண்டாவது படமாக 'N4' திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். தரம்ராஜ் ஃபிலிம்ஸ் நிறுவனமும், பியாண்ட் தி லிமிட் கிரியேஷன்ஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

வடசென்னை மக்களின் வாழ்வியலை யதார்த்தமான கோணத்தில் காட்டும் இப்படத்தில் மைக்கேல் தங்கதுரை, கேப்ரியல்லா செலஸ், அனுபமா குமார், வடிவுக்கரசி, அபிஷேக் சங்கர், அழகு, அஃப்சல் ஹமீது , வினுஷா தேவி, அக்க்ஷய் கமல், பிரக்யா நாக்ரா எனப் பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சமீபத்தில் இப்படம் ‘Calcutta International Cult Film Festival’ திரைப்பட விழாவில் பங்கேற்றது. விழாவின் முடிவில், சிறந்த இயக்குநருக்கான விருதை 'N4' பட இயக்குனர் லோகேஷ் குமார் வென்றார். ஏற்கனவே இத்திரைப்படம் 11ஆவது தாதா சாகேப் பால்கே திரைப்பட விழா 2021ல் சிறந்த பின்னனி இசைக்கான விருது வென்றது குறிப்பிடத்தக்கது.

tamil cinema
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe