Advertisment

“இந்தியாவில் வரப்போகிற மிகச்சிறந்த படம் வாடிவாசல்” - மிஷ்கின்

mysskin speech at the proof audio launch

பேராண்மை, அரவான், கபாலி உள்ளிட்ட படங்களின் நடித்த தன்ஷிகா, கடைசியாக விஜய் சேதுபதியின் லாபம் படத்தில் நடித்திருந்தார். இப்போது தி புரூப் என்ற தலைப்பில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை நடன இயக்குநர் ராதிகா இய்க்கியுள்ளார். இதன் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். கோல்டன் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு தீபக் என்பவர் இசையமைத்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் மே 3ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Advertisment

இந்த நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் படக்குழுவினரோடு மிஷ்கின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் படக்குழு குறித்து நிறைய விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். அதன் ஒரு பகுதியில் இளையராஜா மற்றும் தனுஷ் குறித்து பேசுகையில், “இளையராஜா ஒரு ஜீனியஸ். அவரை பற்றி ஒரு பயோ பிக் வருகிறது. அதைப் பார்க்க ரொம்ப ஆவலோடு இருக்கேன். தனுஷ் ஒரு சிறந்த நடிகர். அவருக்கு கிடைத்த ஒரு பெரிய கிஃப்ட், ராஜாவாக நடிப்பது. அவருடைய வாழ்க்கையில் அது உன்னதமான தருணம். கண்டிப்பாக தனுஷ் ஸ்கோர் செய்வார், அந்தப் பாத்திரத்திற்கு நியாயம் சேர்ப்பார்” என்றார்.

Advertisment

மேலும் விஜய் சேதுபதி குறித்து மிஷ்கின் பேசுகையில், “விஜய் சேதுபதி அல்லது ஷாருக்கான் இருவரில் யாரை வைத்து படம் பண்ணுவேன் எனக் கேட்டால், நான் விஜய் சேதுபதியை வைத்து தான் படம் பன்னுவேன். அந்தளவிற்கு விஜய் சேதுபதி ஒரு மகா கலைஞன். எனக்கு கிடைத்த ஒரு குழந்தை மற்றும் நண்பன்” என்றார்.

பின்பு வெற்றிமாறன் குறித்து பேசுகையில், “வெற்றிமாறன் என்னுடைய நண்பர். நல்லா படிக்கக்கூடியவர். வாடிவாசல் எப்படி வரும் எனக் கேட்டதற்கு, வாடிவாசல் நாவலிலிருந்து அவர் படமாக்கவுள்ள பகுதியை மட்டும் பகிர்ந்தார். அதை இந்தியாவில் வரப்போகிற மிகச்சிறந்த படமாக பார்க்கிறேன். வாடிவாசல் பெரிய ஹிட்டடிக்கும். சிறந்த நடிகர் சூர்யா. அந்தப் படத்திற்கு பிறகு லெஜண்டாக மாறிவிடுவார்” என்றார்.

Ilaiyaraaja mysskin sai dhansika
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe