Mysskin

பாலாஜி கே குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், மீனாக்ஷி சவுத்ரி, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள கொலை திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

Advertisment

விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இயக்குநர் மிஷ்கின் பேசுகையில், “தயாரிப்பாளர் தனஞ்செயன் சில நாட்களுக்கு முன்பு அழைத்து ஒரு விழாவிற்கு நீங்கள் கெஸ்டாக வரவேண்டும் என்றார். படம் பெயர் என்ன என்று கேட்டதும் கொலை என்றார். அந்த விழாவிற்கு நான்தான் பொருத்தமான விருந்தினர் கண்டிப்பாக வருகிறேன் என்றேன். இயக்குநர் பாலாஜியை ரொம்ப நாட்களாக எனக்குத் தெரியும். ஒரு சந்திப்பில் அவர் பேசுவதை கூர்ந்து கவனித்தபோது அவர் ஆழமாக பேசக்கூடியவர் என்பது தெரிந்தது. படத்தின் ட்ரைலர் பார்த்தேன். சிறப்பாக உள்ளது. இசையமைப்பாளராக இருந்து இன்றைக்கு இவ்வளவு பெரிய நடிகராக விஜய் ஆண்டனி வளர்ந்திருப்பது சினிமா மீது அவருக்கு இருக்கும் ஆர்வத்தை காட்டுகிறது. கொலை படம் மிகப்பெரிய வெற்றியடைய வாழ்த்துகள்” எனத் தெரிவித்தார்.

Advertisment

இதற்கிடையே மிஷ்கின் பேசிக்கொண்டிருக்கையில், அவருக்கு பின்புறமிருந்த சிலர் பேசிக்கொண்டிருந்தனர். அதில் கடுப்பான மிஷ்கின் அவர்களை அமைதியாக இருக்கும்படி கேட்டுக்கொண்டதோடு, பேச வேண்டுமென்றால் வெளியே போய் பேசுங்கள் எனக் கோபமாக கூறினார்.