mysskin speech at Aadharam Trailer Launch

ஜி. பிரதீப் குமார், ஆஷா மைதீன் தயாரிப்பில் இயக்குநர் கவிதா இயக்கத்தில், புதுமுகங்கள் அஜித் விக்னேஷ், பூஜா சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள படம்'ஆதாரம்'. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு விழா இன்று படக்குழுவினருடன்திரைப் பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

Advertisment

இந்நிகழ்வில் இயக்குநர் மிஷ்கின் பேசியதாவது, "ஒரு பத்திரிக்கையாளர் வந்தவுடனே நல்ல கண்டண்ட் தாருங்கள் என்றார். என்ன கண்டண்ட் எனத் தெரியவில்லை. சகோதரி கவிதா என்னை வந்து அழைத்தார். நான் வந்து பேசினால், ஏதாவது திட்டி அது வைரல் ஆகிவிடுகிறது என்பதால் என்னை எல்லா பங்ஷனுக்கும் அழைத்து விடுகிறார்கள். ஆனால் கவிதா அவர்களின் முகவரி என்னை இங்கு அழைத்து வந்துவிட்டது. அவரது தந்தை டி.என். பாலுவின் படங்களான சங்கர்லால் முதல்பல படங்களுக்கு நான் ரசிகன். அந்தப் படத்தின் பாதிப்பில் தான் துப்பறிவாளன் படத்தில் விஷாலுக்கு தொப்பி வைத்தேன். தமிழ் சினிமாவில் காப்பிஎன்கிற குற்றச்சாட்டு வந்து கொண்டே இருக்கிறது. என் மீதே நிறைய குற்றச்சாட்டு இருக்கிறது.

Advertisment

உலகம் முழுக்கவே ஆறு கதைகள் தான்;அது தான் திரும்ப திரும்ப எடுக்கப்படுகிறது. எல்லோருமே ஒரே கதையை தான் திரும்ப திரும்ப எடுத்து வருகிறோம். கவிதாவை என் மகளாகவே பார்க்கிறேன். அவர் இது என் முதல் படம்தான்குறைந்த நாளில் தான் எடுத்தேன். அடுத்த படம் தான் நன்றாக எடுக்க போகிறேன் என்றார்.அந்த உண்மைக்காக அவரைப் பாராட்ட வேண்டும். என் முதல் படம் ஏழு நாள் தோல்வி தான். பின் எட்டாவது நாளில் தான் என் படம் ஓடி வெற்றியடைந்தது. தோல்வியிலிருந்து தான் படம் செய்வதை கற்றுக்கொள்ள வேண்டும். நான் லியோவில் சின்ன கேரக்டர் தான் செய்துள்ளேன். சிவகார்த்திகேயன் படத்தில் இப்போதுதான் நடித்து முடித்துள்ளேன். இந்த அப்டேட் எங்கு போனாலும் கேட்கிறார்கள். அதனால் சொல்லிவிட்டேன். இந்தப் படம் அனைவரும் கஷ்டப்பட்டு உண்மையாக உழைத்து உருவாக்கியுள்ளார்கள். படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்" என்றார்.

இயக்குநர் கவிதா பேசியதாவது, "இந்த விழாவிற்கு வருகை தந்த மிஷ்கின்,ஒய்.ஜி. மகேந்திரன், சரவணன் ஆகியோருக்கு நன்றி. இந்த படத்தில் என்னுடன் இணைந்து உழைத்த அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றிகள். எல்லோர் வீட்டிலும் ஒரு வாலு இருப்பார்கள். என் வீட்டில் வாலாக இருந்தது நான் தான். இது என் முதல் படம். என் தந்தை டி.என். பாலு இதை உரக்க இங்கு சொல்கிறேன். என்னுடைய தந்தை இவ்வளவு பெரிய ஆளாக இருக்கிறார். யாரும் நம்மை கண்டுகொள்ளவில்லையே என தோன்றியது. ஆனால் இந்த விழாவிற்கு மிஷ்கின் சார் வந்த காரணம் என் தந்தை.ஒய்.ஜி. மகேந்திரன்சார் நடிக்க காரணம் என் தந்தை. இந்த பெருமை போதும் எப்போதும் பழயதை மறக்காதீர்கள், புதுப்பித்துக் கொண்டே இருங்கள்.

Advertisment

என் புரடியூசர் ஒரு பிச்சைக்காரன். பிச்சைக்காரன் படத்திற்கும் அவருக்கும் ஒரு சம்பந்தமுண்டு அதனால் அவரை அப்படி கூப்பிட்டு பழகிவிட்டோம். என்னுடைய படம் சிசிடிவி பற்றியதல்ல;பதிந்த விசயத்தை மறைக்கப்பட்டது பற்றித்தான் என் படம். ஒரு உண்மை சம்பவத்தை வைத்து கஷ்டப்பட்டு உருவாக்கியுள்ளோம். என் படத்திற்கு உங்கள் ஆதரவு தேவை" என்றார்.