வெற்றிமாறன் தயாரிப்பில், அவரது உதவி இயக்குநர் வர்ஷா பரத் இயக்கியுள்ள படம் ‘பேட் கேர்ள்’. இபப்டத்தில் அஞ்சலி சிவராமன், சாந்தி பிரியா, ஹ்ரிது ஹருண், டீ.ஜே.அருணாசலம் மற்றும் சரண்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அமித் திரிவேதி இசையமைத்துள்ள இப்படத்தை பாலிவுட் இயக்குநர் அனுராக் கஷ்யப் வெற்றிமாறனோடு இணைந்து வழங்குகிறார். இப்படதின் டீசர் கடந்த ஜனவரியில் வெளியானது. இதில் குறிப்பிட்ட சமூக பெண்களின் வாழ்க்கையைத் தவறாக சித்தரித்துள்ளதாக சில விமர்சனங்கள் எழுந்தது. இப்படம் பல்வேறு சிக்கல்களை கடந்து வரும் 5ஆம் தேதி வெளியாகிறது. இதனையொட்டி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் படக்குழுவினருடன் மிஷ்கினும் கலந்து கொண்டார். 

Advertisment

நிகழ்வில் மிஷ்கின் பேசுகையில் அவருடைய பதின்வருவத்தில் நடந்த கதையை பகிர்ந்து கொண்டார். அவர் பகிர்கையில், “என்னுடைய 17 வயதில் ரொம்ப கஷ்டப்பட்டு என் நண்பர்கள்கிட்ட மூணு சரோஜா தேவி பாலியல் கதை புக் வாங்கிட்டு வந்தேன். அதை ஒழிச்சு வச்சு, எங்க அம்மா வீட்டவிட்டு வெளியே எப்ப போவாங்கன்னு வெயிட் பன்னிட்டு இருந்தேன். ஒரு நாள் எங்க அம்மா, போனாங்க. போகும்போது நான் திரும்பி வர ரெண்டு மணி நேரம் ஆகும்னு சொன்னாங்க. நானும் சரின்னு சொல்லிட்டு, அவங்க போனதும் கதவ சாத்திட்டு, அந்த புக்கை படிச்சிட்டு இருந்தேன். அப்போ திடீர்னு அம்மா கதவ தட்டிட்டாங்க. உடனே மூணு புக்கையும் டிவிக்கு பின்னாடி போட்டுட்டேன். உடம்பெல்லாம் வேர்த்திடுச்சு. கதவ திறந்து என்னை பார்த்ததும் என்னடா இப்டி வேர்த்துருக்குன்னு கேட்டாங்க, எனக்கு ஜொரம் அடிக்குற மாதிரி இருக்குன்னு வெளியே ஓடிட்டேன். அவங்க பர்ஸ்-ல இருந்து காசு எடுத்துட்டு போக மறந்துட்டாங்க. 

ஒரு மூணு மணிநேரம் கழிச்சு திரும்ப வீட்டுக்கு வரேன். வீட கூட்டிருப்பாங்க போல, அந்த மூணு புக்கையும் எங்க அம்மா டேபில் மேல வச்சிருந்தாங்க. அந்த தருணத்தில் எங்க அம்மாவை நான் கடவுளாக பார்த்தேன். இதுவே அந்த 17 வயசு பையன் ஒரு பெண்ணாக இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும். எங்க அம்மா கண்டிப்பா அடிச்சிருப்பாங்க. அப்போ எனக்கு ஒரு சுதந்திரம், ஒரு பெண்ணுக்கு ஒரு சுதந்திரமா. காமம் ஆண்களுக்கு மட்டும் சொந்தமா. ஏன் கடவுள் ஆண்களுக்கு குழந்தை பிறக்கும் தண்மையை கொடுக்கவில்லை. ஏனென்றால் ஆண்களை விட பெண்கள் ஒரு படி மேலே. யற்கை பெண்களை ஒரு படி அதிகமாகத்தான் மதிக்கிறது” என்றார்.