/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1172.jpg)
சிவகார்த்திகேயன், 'டான்'படத்தைதொடர்ந்து பிரபல தெலுங்கு இயக்குநர்அனுதீப்இயக்கும் 'ப்ரின்ஸ்' படத்தில் நடித்து வருகிறார். கதாநாயகியாக உக்ரைன் நாட்டு நடிகை மரியாரியாபோஷாப்காநடிக்கிறார். சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்குதமன்இசையமைக்கிறார். இப்படத்தை 'ஸ்ரீவெங்கடேஸ்வராசினிமாஸ்' நிறுவனத்துடன் இணைந்து 'சுரேஷ்புரொடக்ஷன்' நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படம் தீபாவளிக்கு வெளியாகும்எனபடக்குழு அறிவித்துள்ளது.
இதனையடுத்துசிவகார்த்திகேயன் அடுத்ததாக 'மண்டேலா' படத்தின் இயக்குநர்மடோன்அஷ்வின் இயக்கத்தில் ஒரு படம்நடிக்கவுள்ளதாககூறப்படுகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கியாராஅத்வானிநடிக்கவுள்ளதாககூறப்படுகிறது.
இந்நிலையில் இப்படம் குறித்த புதிய அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தில் இயக்குநர்மிஷ்கின்வில்லன் கதாபாத்திரத்தில்நடிக்கவுள்ளதாககூறப்படுகிறது. விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)