Advertisment

'பிசாசு 2' படத்தின் படப்பிடிப்பை நிறைவுசெய்த படக்குழு!

pisasu 2

‘சைக்கோ’ படத்தைத் தொடர்ந்து, தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான மிஷ்கின் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘பிசாசு 2’. கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான ‘பிசாசு’ படத்தின் இரண்டாம் பாகமான இப்படத்தில், ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் முருகானந்தம் தயாரிக்க, கார்த்திக் ராஜா இசையமைக்கிறார்.

Advertisment

கடந்த ஆண்டின் இறுதியில் பூஜையுடன் படப்பிடிப்பைத் தொடங்கிய படக்குழு, திண்டுக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படப்பிடிப்பைநடத்திவந்தது. முழுவீச்சில் நடைபெற்றுவந்த பிசாசு 2 படத்திற்கான படப்பிடிப்பு கரோனா பரவல் காரணமாக பாதியில் தடைபட்டது. பின்னர், இயல்புநிலை திரும்பத்தொடங்கியவுடன் மீண்டும் படப்பிடிப்பைத் தொடங்கிய படக்குழு, தற்போது மொத்த படப்பிடிப்பையும் நிறைவுசெய்துள்ளது.

Advertisment

மனித நடமாட்டமே இல்லாத அடர் வனப்பகுதிக்குள் சில முக்கிய காட்சிகளை மிஷ்கின் படமாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்திற்கான இறுதிகட்டப் பணிகளை விரைவில் தொடங்கவுள்ள படக்குழு, டீசர், ட்ரைலர், பாடல் வெளியீடு என அடுத்தடுத்த அப்டேட்களை விரைவில் வெளியிடத் திட்டமிட்டுள்ளது.

director mysskin pisasu part 2
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe