/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/46_10.jpg)
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான மிஷ்கின் கடைசியாக இயக்கிய படம் 'சைக்கோ'. உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து, மிஷ்கின் இயக்கி மாபெரும் வெற்றிப்படமாக அமைந்த பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க, மிஷ்கின் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியானது. கடந்த சில மாதங்களுக்கு முன் இத்தகவலை மிஷ்கினும் உறுதி செய்தார்.
இந்தநிலையில், இப்படத்தின் பணிகளை பூஜையுடன் தொடங்கியுள்ளார் மிஷ்கின். நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கும் இப்படத்திற்கு, கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். ராக்போர்ட் எண்டர்டைன்மென்ட் சார்பில் டி.முருகானந்தம் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பானது அடுத்த மாதம் தொடங்கவுள்ளதாகவும், ஒரே கட்டத்தில் மொத்த படத்தினையும் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)