சமீபத்தில் மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ஒரு படம் உருவாகுவதாக தகவல் வெளியானது.இது தொடர்பான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. தகவலில் இருப்பது போல இருவரும் ஒரு புதிய படத்திற்காக கூட்டணி வைத்துள்ளது உண்மைதான், ஆனால் இருவரும் நடிக்க கமிட்டாகியுள்ளனர். 

Advertisment

இப்படத்தை பிரவீன் எஸ். விஜாய் என்பவர் இயக்குகிறார். ஜீ ஸ்டூடியோஸ் மற்றும் ட்ரம்ஸ்டிக் புரொடக்‌ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர். இது தொடர்பக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு போஸ்டரில் செஸ் விளையாட்டின் குதிரை, ராஜா மற்றும் ராணி காய்கள் இடம் பெற்றுள்ளது. இப்படத்தை ‘புரொடக்‌ஷன் 09’ என்ற தற்காலிக தலைப்பைக் கொண்டு இப்போதைக்கு உருவாக்கவுள்ளனர். படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார். கோர்ட் ரூட் டிராமாவாக இப்படம் உருவாகவுள்ளது. 

கீர்த்தி சுரேஷ், கடைசியாக உப்பு கப்புரம்பு என்ற தெலுங்கு படத்தில் நடித்திருந்தார். தமிழில் ‘ரகு தாத்தா’ படத்தில் நடித்திருந்தார். ஆனால் அவர் நடிப்பில் உருவான ‘ரிவால்வர் ரீட்ட’ படம் கடந்த மாதம் 29ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு சில காரணங்களால் வெளியாகவில்லை. இப்படத்தை தவிர்த்து இவர் நடிப்பில் ‘கண்ணிவெடி’ படமும் உருவாகி வருகிறது.

மிஷ்கினை பொறுத்தவரை, இயக்குநராக ட்ரெயின் படத்தை இயக்கி வருகிறார். ரிலீஸூக்கு தயாராகி வருகிறது. இதுபோக பிசாசு படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படம் சில காரணங்களால் அனைத்து பணிகளும் முடிந்து இன்னும் வெளியாகாமல் இருக்கிறது. நடிகராக பார்க்கையில் கடைசியாக விஷ்ணு விஷால் சகோதரர் ஹீரோவாக அறிமுகமான ‘ஓஹோ எந்தன் பேபி’ படத்தில் தோன்றியிருந்தார். 

Advertisment