Advertisment

இசையமைப்பாளராக அவதாரம் எடுத்த மிஷ்கின்

Mysskin incarnated as a music director

தமிழ் சினிமாவில் தன் தனித்துவமான இயக்கத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் மிஷ்கின். இயக்குநராக மட்டுமில்லாமல் நடிப்பது, பாடுவது, பாடலுக்கு வரிகள் எழுதுவது என பன்முகத்தன்மை கொண்ட நபராகவும் திகழ்கிறார். அந்த வகையில் கடைசியாக ஜி.வி பிரகாஷ் நடிப்பில் வெளியான 'பேச்சுலர்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து தற்போது 'பிசாசு 2' படத்தை இயக்கிவருகிறார்.

Advertisment

இந்நிலையில் மிஷ்கின் இசையமைப்பாளராக அறிமுகமாகவுள்ளார். ‘சவரக்கத்தி’ இயக்குநர் ஆதித்யா இயக்கும் அடுத்த படத்தில் இசைப்பணிகளை மேற்கொள்கிறார், அதோடு முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். இப்படத்தை 'மாருதி பிலிம்ஸ்' சார்பாக ஆர்.ராதாகிருஷ்ணன் தயாரிக்கிறார். ‘டெவில்’ என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் விதார்த், பூர்ணா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தில் மொத்தம் நான்கு பாடல்கள் உள்ளதாக கூறப்படுகிறது, விரைவில் பாடல்களை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

Advertisment

மிஷ்கின், சில பாடல்களை எழுதி பாடியுள்ளார். குறிப்பாக இவர் எழுதி பாடிய 'பார் ஆன்தம்'(முகமூடி) மற்றும் 'இவன் துப்பறிவாளன்...'(துப்பறிவாளன்) போன்ற பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் 'கண்ணதாசன் காரைக்குடி'(அஞ்சாதே), 'வெள்ளைக்கார ராணி...'(கள்ளப்படம்) உள்ளிட்ட சில ஹிட் பாடல்களையும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

director mysskin
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe