இசையமைப்பாளராக களமிறங்கும் இயக்குநர் மிஷ்கின்

 Mysskin is a director who is making his debut as a music composer

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களத்தைத்தேர்ந்தெடுத்து இயக்குவதில் கெட்டிக்காரர் இயக்குநர் மிஷ்கின். இவர் ஆண்ட்ரியா நடிப்பில்‘பிசாசு’ படம் இயக்கி வரும்நிலையில்,விஜய் நடிப்பில் உருவாகும் ‘லியோ’ படத்திலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் ‘மாவீரன்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதுபோக இன்னும் ஒரு சில படங்களில் கெளரவ வேடங்களில் நடித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.

இயக்குதல், நடிப்பு மட்டுமல்லாமல் பாடகராகவும் களம் இறங்கியவர்தற்போது புதிய படம் ஒன்றிற்கு இசையமைப்பாளராக புதிய அவதாரம் எடுத்துள்ளார். ஜி.ஆர். ஆதித்யா எழுதி இயக்கும் ‘டெவில்’ என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார் இயக்குநர் மிஷ்கின். ஜி.ஆர். ஆதித்யா இயக்குநர் மிஷ்கினின் சகோதரர் என்பதும் இவர் ஏற்கனவே ‘சவரக்கத்தி’ என்ற படத்தை இயக்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் ஆடியோ உரிமத்தைசோனி மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது.

director mysskin music director
இதையும் படியுங்கள்
Subscribe