/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/249_5.jpg)
பேச்சாளரும், பட்டிமன்ற நடுவருமான நெல்லை கண்ணன்(77) 1970களில் தொடங்கி தமிழக அரசியல் சூழலில் முக்கிய ஆளுமைகளாக, பிரமுகர்களாக இருந்தவர்களிடம் நெருங்கிப் பழகியவர். குறிப்பாக காமராஜர் குறித்து நெல்லை தமிழில் இவர் ஆற்றிய சொற்பொழிவுகள் மிகவும் பிரபலம். நெல்லைக்கண்ணனின் முதல் மகன் சுரேஷ் கண்ணன் திரைப்பட இணை இயக்குநராகவும் எழுத்தாளருமாக உள்ளார். இரண்டாம் மகன் ஆறுமுகம் தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சியாளராகவும் உள்ளார். நெல்லை கண்ணன் தமிழக அரசின் இளங்கோவடிகள் விருதைப் பெற்றுள்ளார்.
இந்நிலையில் உடல்நலக்குறைவால் நெல்லை கண்ணன் திருநெல்வேலியில் உள்ள அவரது வீட்டில் உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், முதல்வர் ஸ்டாலின் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் மிஷ்கின் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், "நாடு போற்றும் தமிழறிஞரும், எனது பிரியத்திற்குரிய நண்பர் சுகாவின் தந்தையாருமான அய்யா நெல்லை கண்ணன் மறைவு துயரம் தருகிறது. அவரது குடும்பத்தார்கள், நண்பர்கள் மற்றும் தமிழ் நேயர்கள் அனைவருக்கும் எனது ஆழந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)