Advertisment

"விஷாலோடு சத்தியமா படமே பண்ணமாட்டேன்" - மிஷ்கின் உறுதி

mysskin about vishal latest speech

Advertisment

ஜி.வி. பிரகாஷ், வெங்கட் பிரபு, கௌரி ஜி கிஷன் உள்ளிட்ட பலர் நடிப்பில் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'அடியே'. பிரபா பிரேம்குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ட்ரைலரை தனுஷ் ட்விட்டரில் வெளியிட்டுள்ள நிலையில்,படம் வருகிற 25 ஆம் தேதி வெளியாகவுள்ளதாகப் படக்குழு குறிப்பிட்டுள்ளது. இதையொட்டி நடந்த ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் மிஷ்கினும் கலந்து கொண்டு பேசியுள்ளார்.

அப்போது படம் குறித்துப் பேசி முடித்த அவர் விஷால் குறித்தும் பேசியுள்ளார். அவர் பேசுகையில், "நான் பொறுக்கி, பொறுக்கி எனப் பேசியதை சொல்லிக்கிட்டே இருக்கீங்க. விஷாலும், என்னைப் பத்தி யாராவது கேட்டால்...நான் துரோகத்தை மறக்கமாட்டேன் எனச் சொல்லிக்கொண்டே இருக்கான். என்ன துரோகம் எனத்தெரியவில்லை. அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை. அவன், என்றும் என் இதயத்துக்கு நெருக்கமானவன். சண்டை போட்டுக்கிட்டோம் அவ்வளவுதான். சண்டை போடாமல் எப்படி வாழ்க்கையில் இருக்க முடியும்.

அது ஒரு நல்ல நட்பு. ரெண்டு பேரும் ரொம்ப நேசிச்சோம். திடீரென்று சண்டை போட்டுக்கிட்டோம். அவனை ரொம்ப மிஸ் பண்ணுறேன். ஆனால் அவன் என்னை மிஸ் பண்ணமாட்டான். அது எனக்கு தெரியும். அவனுக்கு ஈகோ அதிகம். எனக்கும் இருக்கு. ஆனால் நான் அதை மேனேஜ் பண்ணிப்பேன். அதனால் பொறுக்கி என்பது ஒரு கோவத்தில் சொன்ன வார்த்தை. அதை தவிர்த்துவிடலாம் என நினைக்கிறேன். எல்லாருமே அதை பயன்படுத்த ஆரம்பிச்சிட்டாங்க. ஆனால் விஷால் அப்படியெல்லாம் கிடையாது. அவன் ஒரு இனிமையான மனிதன். என்னுடன் அவன் பணியாற்றவில்லை என்றாலும் அவனுடைய படம் வெற்றி பெற வேண்டும் என பிரார்த்தனை செய்கிறேன். உடனே எல்லாரும் விஷாலுக்காக ஐஸ் வைக்கிறேன் எனச் சொல்வார்கள். விஷாலோடு இனிமேல் சத்தியமா படமே பண்ணமாட்டேன். கெஞ்சவும் மாட்டேன்" என்றார்.

actor vishal director mysskin
இதையும் படியுங்கள்
Subscribe