Advertisment

"நான் விஜய்யை வைத்து படம் இயக்கினால்..?" - ரசிகருக்கு மிஷ்கின் சொன்ன பதில்!

vagagadga

Advertisment

'சைக்கோ' படத்துக்குப் பிறகு ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக டி. முருகானந்தம் தயாரிக்கும் 'பிசாசு 2' படத்தை இயக்கிவருகிறார் இயக்குநர் மிஷ்கின். நடிகை ஆண்ட்ரியா கதையின் நாயகியாக நடித்துவரும் இப்படத்தின் படப்பிடிப்பு கரோனா 2வது அலை பரவல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் நிலையில், இயக்குநர் மிஷ்கின் நேற்று (22.06.2021) ட்விட்டர் ஸ்பேஸ் மூலமாக ரசிகர்களிடம் உரையாடினார்.

அப்போது உங்கள் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்தால் அவர் எந்த வேடத்தில் நடிப்பார் என்றுரசிகர் ஒருவரின் கேள்விக்கு, “ஜேம்ஸ் பாண்ட்” என்று பதிலளித்தார் மிஷ்கின். மேலும் இன்னொரு ஒரு ரசிகர், நடிகை ஆண்ட்ரியா 'பிசாசு 2' படத்தில் நடித்தது பற்றி கேட்டதற்கு இயக்குநர் மிஷ்கின், “'பிசாசு 2' படத்திற்காக நடிகை ஆண்ட்ரியா தேசிய விருதை வாங்குவார்” என்றார். இந்தச் செய்தி தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது.

myskin
இதையும் படியுங்கள்
Subscribe