mysskin about boney kapoor

எம்.ஆர்.மாதவன் இயக்கத்தில் உதய் கார்த்திக், ரிஷி ரித்விக், சாய் பிரியா தேவா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'டைனோசர்ஸ்'. ஸ்ரீனிவாஸ் சம்பந்தம் தயாரித்துள்ள இப்படத்திற்கு போபோ சசி இசையமைத்துள்ளார். இப்படம் இந்தாண்டு கோடைக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தின் ட்ரைலர் நேற்று வெளியாகியுள்ள நிலையில் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றுள்ளது. இதில் தயாரிப்பாளர் போனி கபூர், இயக்குநர் மிஷ்கின் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு பேசினர்.

Advertisment

அப்போது மிஷ்கின் பேசுகையில், "இந்த நிகழ்ச்சி ஒரு சினிமா நிகழ்ச்சி போல் இல்லை. ஒரு குடும்ப நிகழ்ச்சி போல் உள்ளது. நான் என்னுடைய அடுத்த படத்துக்கு கதை எழுதிக்கிட்டு இருக்கேன். இரண்டு நாள் முன்னாடி இந்த படக்குழு வந்தாங்க. அந்த டைரக்டர பார்த்தேன். அவன் முகத்துல சிகரெட் அடிக்கிற பழக்கம் தெரிஞ்சிச்சு. அப்பவே படம் ஹிட்டுன்னு சொல்லிட்டேன். நான் முதல் படம் பண்ணப்போ 1 நாளைக்கு 100 சிகரெட் அடிப்பேன். அதுவும் அஞ்சாதே படம் அப்போ 120 அடிப்பேன். அந்தளவுக்கு டென்ஷன் இருக்கும். அந்த டென்சன் இருந்தாதான் டைரக்டர். அதனால் இந்த படம் நல்ல ஹிட்டாகும்னு நினைக்கிறேன்.

Advertisment

நான் டிஸ்கஷனில் இருக்கும் போது என் தம்பி வந்து நிகழ்ச்சிக்கு போகணும் மணி ஆச்சு என்றான். நன் வர்லன்னு சொல்லிட்டேன். அப்புறம் போனி கபூர் நிகழ்ச்சி அண்ணானு சொன்னான். எனக்கு போனி கபூர்னா தெரியாதுடா என்றேன். நமக்கு தாணு-னா தெரியும். போனி கபூர்னா யாருன்னு தெரியாது. என் தம்பிக்கு போனி கபூர் எதோ ஒரு வகையில் நண்பர். ஆனா நான் நடிகை ஸ்ரீதேவியின் ரசிகன். அவர் ஒரு மிகச்சிறந்த நடிகை" என்றார். போனி கபூர் தெரியாது என மிஷ்கின் சொன்னவுடன் உறைந்துபோன அரங்கம் பின்பு கலகலப்பானது.