கடந்த 2017ஆம் ஆண்டு விஷால், மிஷ்கின் கூட்டணியில் உருவாகிய படம் துப்பறிவாளன். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து துப்பறிவாளன் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கை லண்டனில் தொடங்கினர்.

Advertisment

vishal myskin

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இதன்பின் எந்தவித அறிவிப்பும் இப்படம் குறித்து வெளியாகவில்லை. மிஷ்கினின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவான சைக்கோ படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது.

இதனிடையே விஷாலுக்கும் மிஷ்கினுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுவிட்டது. அதனால் மிஷ்கின் துப்பறிவாளன் 2 படத்தை இயக்கப்போவதில்லை, விஷாலே அந்த படத்தை இயக்குகிறார் என்று சொல்லப்பட்டது.

இந்நிலையில் கடந்த 11ஆம் தேதி விஷால் இயக்கும் துப்பறிவாளன் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. அதனுடன் விஷால் தரப்பிலிருந்து மிஷ்கின் ஏன் நீக்கப்பட்டார் என்பது குறித்து அறிக்கையும் வெளியானது. அதேபோல மிஷ்கின் விஷாலுக்கு விதித்த 15 நிபந்தனைகளும் இணையத்தில் வெளியானது.

விஷால் வெளியிட்ட அறிக்கையில், “இனி எந்த தயாரிப்பாளரும் மிஷ்கினுக்கு படம் தயாரிக்காதீர்கள்” என்று குறிப்பிட்டிருந்தார். அதற்கு பதிலடி தரும் வகையில் வெல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் உரிமையாளர் ஐசரி கணேஷ் சார்பில், “மிஷ்கின் உங்கள் மீதும், உங்கள் கதை மீதும் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. நீங்கள் ரெடி என்றால் நாங்களும் ரெடி” என்று விஷால் பதிவிட்டிருந்த பதிவில் ரீ-ட்வீட் செய்யப்பட்டுள்ளது.