இசையமைப்பாளர் அரோல் கொரேலி 'பிசாசு' படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு மிகுந்த வரவேற்புடன் அறிமுகமானவர். அவரது இசையில் 'போகும் பாதை தூரமில்லை' என்ற பாடலில், உத்தாரா உன்னிகிருஷ்ணன் குரலுடன் சேர்ந்து அரோலின் வயலினும் கேட்பவர்கள் மனதை ஆழமாகத் தீண்டிச் சென்றது.
பிசாசுக்குப் பிறகு பசங்க2, சவரக்கத்தி, துப்பறிவாளன் உள்பட சில படங்கள் இவரது இசையில் வெளிவந்தன. தற்போது இவர் இசையில் இயக்குனர் வெற்றிமாறன் தயாரித்துள்ள 'அண்ணனுக்கு ஜே' திரைப்படம் வெளிவரவுள்ளது. 'அட்டகத்தி' தினேஷ் நடித்துள்ள இந்தப் படத்தில் அரோல் முதன் முறையாக ஏழு பாடல்களுக்கு இசையமைத்துள்ளாராம். இதுவரை அவர் இசையமைத்த படங்களில் பெரும்பாலும் பின்னணி இசைக்கே முக்கியத்துவம் இருந்தது.
style="display:inline-block;width:336px;height:280px" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="3041061810">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
அதென்ன அரோல் கொரேலி? இவரது உண்மையான பெயர் அருள்முருகன். சென்னை மறைமலைநகரைச் சேர்ந்தவர் இவர். இயக்குனர் மிஷ்கின் இவரது பெயரை இப்படி மாற்றினார். அருள் முருகனிலிருந்து அருளை எடுத்து 'அரோல்' ஆக்கி, இத்தாலியைச் சேர்ந்த, 17ஆம் நூற்றாண்டின் புகழ் பெற்ற வயலின் கலைஞரான அர்க்காஞ்சலோ கொரெலியின் பெயரில் இருந்து கொரெலியை சேர்த்து அரோல் கொரேலியாக இவரை மாற்றியிருக்கிறார். இவரும் அடிப்படையில் ஒரு வயலின் கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது. மிஷ்கின் என்ற பெயருமே ரஷ்ய எழுத்தாளர் தாஸ்தாவ்ஸ்க்கியின் புதினம் ஒன்றில் வரும் கதாபாத்திரம் என்பது பலருக்கும் தெரிந்திருக்கலாம்.