/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/468_4.jpg)
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகியுள்ள 'விக்ரம்' படம் ரசிகர்களின் பேராதரவை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ.140 கோடியும் உலகம் முழுவதும் ரூ.300 கோடிக்கும் மேலாக வசூலித்து வருகிறது. இதனிடையே 'விக்ரம்' படத்தின் சக்சஸ் மீட் நேற்று நடைபெற்றது. இதில் கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ், அனிருத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் 'விக்ரம்' படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சியில் நடிகை குஷ்பூ கமல்ஹாசனை சந்தித்துள்ளார். அந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தன் சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்து, "என் ஹீரோ...என் நண்பன்...என் விக்ரம்" என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
My Hero.. My friend. My Vikram ❤️❤️❤️@ikamalhaasanpic.twitter.com/apYEjgjkM2
— KhushbuSundar (@khushsundar) June 18, 2022
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)