/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ANU3232.jpg)
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா, எம்ஜிஆர் மகன் ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் பொன்ராமின் இயக்கத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் ‘DSP’. இந்தப் படத்தின்ஹீரோயினாக,வாஸ்கோடகாமா என்ற போலீஸ் கேரக்டரில் அனுகீர்த்தி நடித்துள்ளார். இவர்களுடன் ‘குக் வித் கோமாளி’ புகழ், இளவரசு, ஞானசம்பந்தன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படம் டிசம்பர் 2ஆம் தேதி தியேட்டரில் வெளியாகவுள்ள நிலையில் நேற்று (25/11/2022) இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நடிகர் கமல்ஹாசன், 'DSP' திரைப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசையை வெளியிட்டார். விழாவில் இயக்குநர் மிஷ்கின், நடிகர் வைபவ் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தபடத்தின் கதாநாயகிஅனுக்ரீத்தி, "எல்லோருக்கும் வணக்கம். நான் அனுகீர்த்தி. இது என்னுடைய முதல் படம் 'DSP'. பொன்ராம் சார் இயக்கத்தில், விஜய்சேதுபதி சார் கூட, ஸ்டோன்பென்ச்தயாரிப்பில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது ரொம்ப ரொம்ப சந்தோசம். கமல்ஹாசன் சார் படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசையைவெளியிட்டதில் ரொம்ப ரொம்ப சந்தோசம். நீங்கள் இங்கு வந்ததற்கு ரொம்ப நன்றி. டிசம்பர் 2 ஆம் தேதி அன்று இந்தப் படம் ரிலீஸ் ஆகிறது. எல்லோரும் கண்டிப்பாக பாருங்கள்" என்றார்.
அனுகீர்த்தி, கடந்த 2018ஆம் ஆண்டு மிஸ் இந்தியா அழகி பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)