my 3 web series release date update

ஹன்ஷிகா மோத்வானி, முகேன் ராவ், சாந்தனு, ஜனனி, அஷ்னா ஜவேரி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள வெப் சீரிஸ் 'மை3'. ராஜேஷ் எம் இயக்கியுள்ள இந்த சீரிஸ் ரொமான்டிக் காமெடி ஜானரில், ரோபோவின் காதலை நகைச்சுவையுடன் சொல்வதாக உருவாகியுள்ளது. இசைப் பணிகளை கணேசன் கவனிக்கிறார். ஹாட்ஸ்டாரில் இந்த சீரியஸ் வெளியாகிறது.

Advertisment

கடந்த மாதம் இந்த சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில் நேற்று ட்ரைலர் வெளியானது. ட்ரைலரில், முகேன்ஒரு பணக்கார பிஸினஸ்மேன். மனித தொடுதல் என்பது அவருக்கு ஒவ்வாமை. யாராவது அவரைத் தொட்டால் அவருக்கு அலர்ஜியாகி, தீவிரமாகப் பாதிப்புக்குள்ளாகிவிடுவார்.இளம் விஞ்ஞானியாக வரும் சாந்தனுவால் உருவாக்கப்பட்டமை3என்ற மனித உருவ ரோபோவை வாங்க ஆர்வமாக இருக்கிறார். ஆனால் உருவாக்கத்தின் போது ஏற்பட்ட சிக்கலில் செயலிழந்து போன மை3 ரோபோவிற்குப் பதிலாகசாந்தனுவின் உண்மையான முன்னாள் காதலி ஹன்சிகாவை அவரிடம் அனுப்புகிறார். முகேனை ஹன்சிகா சந்திக்கும் போது என்ன நடக்கிறது என்பது தான் இந்தக்கதை போல் தெரிகிறது.

Advertisment

இந்நிலையில் இந்த சீரிஸின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. அதன்படி வருகிற 15 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகவுள்ளது.