Advertisment

‘தேவராட்டம்’ என்றால் என்ன... விளக்குகிறார் முத்தையா...

‘கொடிவீரன்’ படத்தைத் தொடர்ந்து ‘தேவராட்டம்’ என்னும் படத்தை இயக்குகிறார் முத்தையா. இந்த படத்தில் கௌதம் கார்த்திக், மஞ்சிமா மோகன் நடிக்க சூரி காமெடி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஃபெஃப்ஸி விஜயன் வில்லனாக நடிக்கிறார். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இப்படத்திற்கு நிவாஸ் கே. பிரஸன்னா இசையமைத்துள்ளார்.

Advertisment

muthaiyah

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இயக்குனர் முத்தையா மீது சாதியை மையமாக வைத்து படங்கள் எடுக்கிறார் என்ற விமர்சனம் பலர் முன் வைக்கின்றனர். இந்த விமர்சனம் இருந்த நிலையில் கௌதம் கார்த்திக்கை வைத்து தான் எடுக்கப்போகும் படத்திற்கு தேவராட்டம் என்று பெயர் வைத்துள்ளதாக தெரிவித்திருந்தார். இது மேலும் சர்ச்சையை கூட்டியது. இந்நிலையில் தேவராட்டம் என்ற தலைப்பு எதற்காக வைத்தேன் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கமளித்துள்ளார் இயக்குனர் முத்தையா.

“தேவராட்டம் என்பது வெற்றிக்கான ஆட்டம். எப்படி கரகாட்டம், ஒயிலாட்டாம் ஒரு ஆட்டமோ அதுபோல தேவராட்டமும் ஒரு ஆட்டம். கரகம், ஒயில் பொழுதுபோக்கு ஆட்டம் தேவராட்டம் வெற்றி ஆட்டம் அவ்வளவுதான் வித்தியாசம். இந்த படத்தில் வெற்றி என்று ஹீரோ இருக்கிறார். வெற்றி என்கிற கதாபாத்திரத்திற்கான ஆட்டம்” என்று தெரிவித்துள்ளார்.

devarattam muthaiya
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe