/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/408_14.jpg)
1984ஆம் ஆண்டு விசு இயக்கத்தில் வெளியான நாணயம் இல்லாத நாணயம், ரஜினி நடிப்பில் 1986ல் வெளியான நான் அடிமை உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்தவர் விஜய் ஆனந்த். குறிப்பாக நான் அடிமை படத்தில் ‘ஒரு ஜீவன் தான், உன் பாடல் தான்...’ பாடல் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். மேலும் ஊருக்கு உபதேசம், ராசாத்தி வரும் நாள் என 10 தமிழ் படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் கன்னடத்தில் 100க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து பிரபலமாகியுள்ளார்.
இந்த நிலையில் விஜய் ஆனந்த் (71) உடல் நலக்குறைவால் சென்னையில் நேற்று காலமாகியுள்ளார். இவரது மறைவு திரையுலகினர்மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதையொட்டி திரை பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் விஜய் ஆனந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)