
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் இசையமைப்பாளராக பணிபுரியும் எஸ்.தமன். தெலுங்கு சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கின்றார்.
கடந்த ஜனவரி மாதம் ‘அலா வைகுந்தபுரமலோ’ என்னும் தெலுங்கு படத்திற்கு அவர் இசையமைத்தது பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. குறிப்பாக தெலுங்கு மக்கள் மத்தியில் மட்டுமின்றி தமிழ், மலையாளம், ஹிந்தி பேசுபவர்கள் மத்தியிலும் ஹிட் அடித்தது.
விஜயின் அடுத்த படத்திற்கு எஸ். தமன் தான் இசையமைப்பாளராக பணிபுரிகிறார் என்று அவரே அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மலையாள சினிமாவில் முதன்முறையாக இசையமைப்பாளராக அடியெடுத்து வைக்கிறார் தமன். தற்போது, ப்ரித்விராஜ் நடிக்கும் 'கடுவா' என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் தமன்.
ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படம் முழுக்க கமர்ஷியல் பாணியில் உருவாகிறது. இதன் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் தொடங்க உள்ளது. ப்ரித்விராஜுடன் நடிக்கவுள்ள நடிகர்கள் தேர்வு, தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.