/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/10_39.jpg)
90களில் இந்திய சினிமாவின் முன்னணி இசை இரட்டையர்களாக இருந்தவர்கள் நதீம் சைஃபி மற்றும் ஷ்ரவன் ரத்தோட். நதிம் - ஷ்ரவன் என்று அழைக்கப்பட்ட இந்த இணை, ‘ஆஷிக்கி’, ‘சாஜன்’, ‘பர்தேஸ்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்துள்ளது.
இந்த நிலையில், இவர்களில் ஒருவரான ஷ்ரவன் ரத்தோட், திடீர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த திங்கட்கிழமை மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நடைபெற்ற பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனையடுத்து, மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று (22.04.2021) நள்ளிரவு சிகிச்சை பலனின்றி காலமானார். இத்தகவலை, அவரது மகன் சஞ்சீவ் ரத்தோட் உறுதிபடுத்தியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)