Advertisment

ஜிமிக்கி கம்மல் பாடல்தான் என் விசிட்டிங் கார்ட் - இசையமைப்பாளர் ரெஞ்சித் உன்னி

Music Director Renjith Unni Interview

மலையாள தேசத்திலிருந்து தமிழுக்கு வந்திருக்கும் இசையமைப்பாளர் ரெஞ்சித் உன்னி அவர்களை சமீபத்தில் அவர் பணியாற்றிய 'பருந்தாகுது ஊர்க்குருவி' படக்குழுவினர் உடன் நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக சந்தித்தோம். அப்போது அவர் பல்வேறு விசயங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

Advertisment

ஜிமிக்கி கம்மல் பாடலில் ஒரு பாடகராக எனக்கு சிறந்த பாராட்டுகள் கிடைத்தன. ஒரு இசையமைப்பாளராக எனக்குக் கிடைத்த முதல் தமிழ் பட வாய்ப்பு இது. திரில்லர் வகையிலான திரைப்படங்களில் இசைக்கு அதிகமான வேலை இருக்கும். இயக்குநர் ராம் சாருடைய ஸ்கூலில் இருந்து வந்தவர் இந்தப் படத்தின் இயக்குநர் தனபாலன். தனக்கு என்ன வேண்டும் என்பதில் இயக்குநர் தெளிவாக இருந்தார்.

Advertisment

இந்தப் படத்தின் ஜீவனாக ஒரு பாடல் வேண்டும் என்று முடிவு செய்த பிறகு, நிறைய நேரம் எடுத்துக்கொண்டு உருவாக்கிய பாடல் தான் மதயானைக் கூட்டம் பாடல். அந்த டியூன் அனைவருக்குமே பிடித்தது. அந்தப் பாடல் இவ்வளவு பிரபலமானது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. கேஜிஎஃப் முதல் பாகத்தின் தமிழ் மற்றும் மலையாள வெர்ஷன்களில் நான் பாடல்கள் பாடியுள்ளேன். அந்தப் படத்தின் டீசர் பார்க்கும்போது அவ்வளவு ஆச்சரியமாக இருந்தது. இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் ரொம்ப ஸ்வீட். ராக்கி பாய் இவ்வளவு ரீச் ஆனதற்கு அவருடைய இசை முக்கியமான காரணம். மிகவும் நல்ல மனிதர் அவர்.

ஜிமிக்கி கம்மல் பாடல் இவ்வளவு பெரிய வெற்றியைப் பெறும் என்று எதிர்பார்க்கவே இல்லை. அந்தப் பாடல் எனக்கு ஒரு விசிட்டிங் கார்டாக அமைந்துவிட்டது. என் மனதுக்கு மிகவும் நெருக்கமான பாடல் அது.இந்தப் படத்துக்கான பின்னணி இசையில் பல இடங்களில் அமைதியும் தேவைப்பட்டது. அமைதியும் இயல்பான சத்தங்களுமே பல நேரங்களில் சிறந்த இசையாக அமைந்துவிடும். அப்படிப்பட்ட ஒரு பின்னணி இசை இந்தப் படத்துக்கு தேவைப்பட்டது. இப்படி ஒரு படத்தில் பணியாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது உண்மையிலேயே மகிழ்ச்சியான விஷயம்.

interview music director N Studio
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe