music director justin prabhakaran gets married

Advertisment

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'பண்ணையாரும் பத்மினியும்' படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன். தமிழைத் தொடர்ந்து மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் இசையமைத்து வருகிறார். இவர் இசையில் வெளியான 'ஒரு நாள் கூத்து', 'டியர் காம்ரேட்', 'ராதே ஷ்யாம்' உள்ளிட்ட சில படங்களின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக இவரின் காதல் பாடல்கள் இளைஞர்களால் அதிகம் ரசிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரனுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இது தொடர்பான புகைப்படத்தை நடிகர் பாலசரவணன் அவரது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "எங்கள் கூட்டத்தின் கடைசி சிங்கிள் இன்று முதல் சங்க உறுப்பினர் ஆகிறான்.. வாழ்த்துகள் நண்பா. வாழ்க வளமுடன்" எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் ஜஸ்டின் பிரபாகரனுக்கு திருமண வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.