imman

Advertisment

திரைத்துறை மற்றும் திரைத்துறை கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக இந்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 2019-ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கான தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. சிறந்த இசையமைப்பாளருக்கான விருதுவிஸ்வாசம் படத்திற்காக இமானுக்கு வழங்கப்பட்டது. இதனையடுத்து, இமானுக்குப் பலரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தேசிய விருது வென்றது குறித்து இமான் ஒரு ட்விட்டர் பதிவினை வெளியிட்டுள்ளார். அப்பதிவில், "சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை மிகவும் பணிவுடன் ஏற்கிறேன். தமிழ் இசைக்கு தேசிய அளவிலான அங்கீகாரம் கிடைத்தது மகிழ்ச்சியளிக்கிறது" என நெகிழ்ச்சியாகக் குறிப்பிட்டுள்ளார்.