Advertisment

இசையமைப்பாளர் தேவா மகள் மீது பெண் பரபரப்பு குற்றச்சாட்டு

music director deva daughter issue

Advertisment

இசையமைப்பாளர் தேவாவிற்கு ஜெயபிரதா என்ற மகள் இருக்கிறார். இவருக்கு சென்னை வடபழனியில் சொந்தமாக வீடு ஒன்று இருக்கிறது. இதில் தீபிகா என்பவர் தனது கணவருடன் கடந்த ஒன்றரை ஆண்டுகள் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். இந்த சூழலில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தீபிகா ஒராண்டு காலமாக வாடகை தரவில்லை என ஜெயபிரதா வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் பின்பு சரியாக வாடகை கொடுப்பதாக தீபிகா தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் வாடகைக்கு இருக்கும் தீபிகா, திடீரென சமூக வலைதளத்தில் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், “எனது வீட்டிற்குள் 7 பேர் கத்தியுடன் புகுந்து என்னை மிரட்டினர். அதோடு வீட்டில் இருந்த அனைத்து பொருட்களையும் அடித்து உடைத்தனர். பின்பு தப்பி ஓடிவிட்டனர். உயிர் பிழைத்ததே பெரிய விஷயம். எனக்கும் எனது கணவரின் உயிருக்கும் ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அதற்கு ஜெயபிரதா தான் காரணம்” என பேசியிருந்தார். மேலும் காவல் துறைக்கும் தகவல் கொடுத்துள்ளார்.

பின்பு தீபிகா வீட்டிற்கு சென்ற காவல் துறையினர் விசாரித்துள்ளனர். அப்போது தீபிகா சரியாக வாடகை கொடுப்பதாக தெரிவித்து. வாடகை தராமல் இருந்தது தெரிய வர, அது குறித்து கேட்டுள்ளனர். அதற்கு தான் நடத்தி வரும் ஹார்டுவேர்ஸ் கடை தற்போது நஷ்டத்தில் இருப்பதால் விரைவில் தந்துவிடுவதாக தெரிவித்துள்ளார். இருப்பினும் வீடு புகுந்து மிரட்டியதாக வீடியோவில் பேசிய தீபிகா போலிசாரிடம் புகார் அளிக்கவில்லை. இந்த சம்பவம் அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

daughter deva Vadapalani
இதையும் படியுங்கள்
Subscribe