Advertisment

“வாய்ப்புக்காக மனசாட்சியை விற்றேன்...” - இசையமைப்பாளர் தேவா உருக்கம்

ஸ்ருதி சீசன் 2 ஆன்லைன் பாட்டு போட்டியின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. இதில் இசையமைப்பாளர் தேவா கலந்து கொண்டு தன்னுடைய சினிமா இசை பயணத்தின் நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.

Advertisment

deva

அப்போது அவர் பேசுகையில், “ முன்பெல்லாம் பாடகர்கள் வாய்ப்பு கேட்பதே சிரமமாக இருக்கும், பாடகர்கள் கேசட்டில் ஏதேனும் ஒரு பாடலை பாடி பதிவு செய்து இசையமைப்பாளர்களிடம் கொடுத்து வாய்ப்பு கேட்பார்கள். இப்போது திறமை இருப்பவர்கள் யார் வேண்டுமானாலும் முன்னுக்கு வருகிறார்கள். அந்த காலத்தில் வாய்ப்பு கிடைப்பது மிகவும் கஷ்டம். நான் தொடக்கத்தில் தூர்தர்ஷனில் அலுவலகத்தில் புளோர் அசிஸ்டெண்ட் வேலை பார்த்தேன். அப்படி என்றால் ஒரு மீட்டிங் நடக்கிறது என்றால் அதில் கலந்துகொள்ள வருபவர்கள் அமர்வதற்காக நாற்காலி எடுத்து போடும் வேலை. மேடையை அலங்கரிக்கும் வேலை, இதுதான் எங்களுடைய வேலை. என்னுடைய சகோதரர்கள் சபேஷ், முரளி அனைவரும் ரெக்கார்டிங்காக அங்கு வருவார்கள், அவர்களுக்கும் நான் நாற்காலி எடுத்து போட்டிருக்கிறேன். அது எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. அவர்களெல்லாம் சினிமாவுக்கு உடனடியாக வந்துவிட்டார்கள். ஆனால், நான் லேட்டாகதான் வந்தேன்.

என்னுடைய நாற்பதாவது வயதில்தான் சினிமாவுக்குள் வந்தேன். என் முதல் படத்துக்கு ஒப்பந்தம் செய்த தயாரிப்பாளர் என்னிடம் வந்து ஒரு பாடகர் புல்லட்டில் வருவார். அவர் எப்படி பாடினாலும் நன்றாக இருக்கிறது என்று சொல்ல வேண்டும். அப்போதுதான் நீங்கள் இசையமைப்பாளர். அவர் பணம் கொடுத்துத்தான் ரிக்கார்டிங்கே நடக்கிறது என்றார். புல்லட்டில் வந்தவர் எனக்கு முன்னமே தெரிந்தவர். அப்போது மயிலாப்பூரில் பெரிய மளிகை கடை ஒன்று வைத்திருப்பார். அவருடைய கடைக்காக வைத்திருக்கும் பெரிய பிளெக்ஸில் கீழே ரூ.150க்கு கச்சேரி செய்து தரப்படும் என்று எழுதியிருப்பார். ரெக்கார்டிங்கு வந்தவுடன் அவர், நான் ஒரு முட்டாளுங்க என்ற பாடலை பாடினார். நானும் தயாரிப்பாளர் சொன்னதுபோல் மனசாட்சியை விற்று ரொம்ப நன்றாக இருக்கிறது என்று அவரை பாராட்டினேன்.

Advertisment

alt="miga miga avasaram" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="17cd241a-022e-435a-b4a2-9d83f128c035" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/500X300-02_25.jpg" />

அந்த தயாரிப்பாளர் எனக்கு ஒரு அட்வான்ஸ் தருவதாக சொன்னார். நானும் நிறைய பணம் தருவார் என்று எதிர்பார்த்து உண்மையாக பல கற்பனையை மனதிற்குள் வைத்திருந்தேன் புஹாரி ஹோட்டலுக்கு போய் பிரியாணியை சாப்பிட்டுவிட்டு ஹேப்பியாக அன்றைய நாளை என்ஜாய் செய்யலாம் என நினைத்தேன். ஆனால் வெறும் எட்டணா கொடுத்தார். தேங்காய் சீனிவாசன் அந்த படத்துக்கு கதாநாயகன். ஆனால் படம் வெளிவரவில்லை. இப்போது முன்னுக்கு வர துடிப்பவர்களுக்கு நாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு வந்தோம் என்பது தெரிவதற்காக இதை சொல்கிறேன். ஆரம்பகாலத்தில் நான் இசயமைத்த 13 படங்கள் இன்னும் திரைக்கு வர்வில்லை, நான் இசையமைத்த பதினான்காவது படம்தான் ரிலீஸானது” என்று கூறினார்.

kollywood deva
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe