கரோனா வைரஸ் தொற்றால் உலகமே முடங்கிப்போயுள்ள நிலையில், கரோனா வைரஸ் பரவலைதடுக்க மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கை அறிவித்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் அனைத்து வகையான சினிமா நிகழ்வுகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால் திரையுலகமும்முடங்கியுள்ளது. இந்த நிலையில்நடிகர்கள் பலரும் பொதுமக்களை வீடுகளில் இருக்கும்படி வீடியோக்களின் மூலம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், நெடுஞ்சாலை, எங்கேயும் எப்போதும், காஞ்சனா 2, இவன் வேற மாதிரி, தீயா வேலை செய்யணும் குமாரு, ஒத்த செருப்பு உட்பட பல படங்களுக்கு இசையமைத்த சி.சத்யா தற்போது கரோனா நோய் தடுப்புக்காக 'விழுத்திரு தனித்திரு வரும் நலனுக்காக நீ தனித்திரு...' என்ற விழிப்புணர்வு பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளார். சமீபத்தில் வெளியான இந்தப் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இன்ஜமாம் எழுதியுள்ள இப்பாடலை பின்னணி பாடகர்கள் சத்ய பிரகாஷ், சத்யன் மகாலிங்கம், அபி, சுதர்சனன் அசோக், கணேசன் மனோகரன், மற்றும் இன்ஜமாம் ஆகியோருடன் இசையமைப்பாளர் சி.சத்யாவும் இப்பாடலை இணைந்து பாடியுள்ளார். இசையமைப்பாளர் சி.சத்யா தற்போது எழில் இயக்கியுள்ள ஆயிரம் ஜென்மங்கள், அரண்மனை 3, ராங்கி ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/WJv51DbfsnQ.jpg?itok=zn8m9gjf","video_url":" Video (Responsive, autoplaying)."]}