Advertisment

பெண் காவலர்களுக்காக ஒரு பாடல்!

கரோனா வைரஸ் தொற்றால் உலகமே முடங்கிப்போயுள்ள நிலையில், கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு மே 3- ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

Advertisment

c sathya

'நெடுஞ்சாலை', 'எங்கேயும் எப்போதும்', 'காஞ்சனா 2', 'இவன் வேற மாதிரி', 'தீயா வேலை செய்யணும் குமாரு', 'ஒத்த செருப்பு' உட்பட பல படங்களுக்கு இசையமைத்த சி.சத்யா தற்போது கரோனா நோய்த் தடுப்புக்காக 'விழுத்திரு தனித்திரு வரும் நலனுக்காக நீ தனித்திரு...' என்ற விழிப்புணர்வு பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளார். சமீபத்தில் வெளியான இந்தப் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழக முதலமைச்சர் பழனிசாமி இந்தப் பாடாலைப் பாராட்டியும், அதை உருவாக்கிய குழுவைப் பாராட்டியும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Advertisment

இந்நிலையில் இந்த விழிப்புணர்வு பாடலைத் தொடர்ந்து மேலும், ஒரு புது விழிப்புணர்வு பாடல் பெண் காவலர்களுக்கு மரியாதை செய்யும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. இன்ஜமாம் எழுதியுள்ள இப்பாடலைப் பின்னணிபாடகர்கள் பிரியா ஹிமேஷ், மாளவிகா ராஜேஷ், பம்பா பாக்யா இவர்களுடைன் இணைந்து இசையமைப்பாளர் சி.சத்யாவும் பாடியிருக்கிறார். இவர் தற்போது எழில் இயக்கியுள்ள ஆயிரம் ஜென்மங்கள், அரண்மனை 3, ராங்கி ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/Km-dGeg-qNg.jpg?itok=kYQxvYsY","video_url":" Video (Responsive, autoplaying)."]}

corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe