Advertisment

மனிதவள மேம்பாட்டு அதிகாரியை மணக்கும் இசையமைப்பாளர் சித்து குமார்

music composer Siddhu Kumar marriage announcement

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இசையமைப்பாளர்களில் ஒருவரான சித்து குமார், சசி இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் குமார், சித்தார்த் ஆகியோரது நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். முதல் படத்திலேயே சூப்பர்ஹிட்பாடலைகொடுத்து பலரின் கவனத்தை தன் பக்கம் திருப்பிய சித்து குமார் அடுத்ததாக ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சுலர் படத்திற்கு இசையமைத்திருந்தார். அந்த படத்தின் பாடல்களும் நல்ல வரவேற்பை பெறவே உதயநிதி நடிப்பில் கண்ணை நம்பாதே, ஹரிஷ் கல்யாண் இயக்கத்தில் நூறுகோடி வானவில், ஜெய் நடிப்பில் ஒரு படம் என அடுத்தடுத்து பல படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார்.இதனிடையே சித்து குமார் இயக்கி இசையமைத்திருந்த “அடி போலி...” என்ற தனியிசை வீடியோபட்டிதொட்டியெங்கும் ஹிட்டடித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisment

இந்த நிலையில், இசையமைப்பாளர் சித்து குமாருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. ஊட்டியை சேர்ந்த எம்.பி.ஏ பட்டதாரி ராஜி என்பவரை சித்து குமார் திருமணம் செய்து கொள்ளவுள்ளார். ராஜி அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் ஒன்றில் மனித வளம் மேம்பாட்டு அதிகாரியாக பணியாற்றுகிறார்.பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட சித்து குமார் - ராஜி திருமணம் வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி மதுரையில் நடைபெறுகிறது.

Advertisment

GV prakash marriage
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe