Advertisment

மீண்டும் தனுஷுடன் இணையும் சந்தோஷ் நாராயணன்?

music composer santhosh narayanan joining dhanush next movie

கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘மாறன்’ படத்தில் நடித்து முடித்துள்ள நடிகர் தனுஷ், தற்போது செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘நானே வருவேன்’ படத்தில் கவனம் செலுத்திவருகிறார். கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது.

Advertisment

இந்தப் படத்தைத் தொடர்ந்து பிரபல தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கும் 'வாத்தி' படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று (23.12.2021) வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே நடிகர் தனுஷ் அடுத்ததாக இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதனைநடிகர் தனுஷ் சமீபத்தில் உறுதி செய்தார்.

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="9bb315d9-a534-4138-a36e-4815f870064c" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/velan-article-inside_3.jpg" />

இந்நிலையில் இப்படத்தின் இசையமைப்பாளர் குறித்ததகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசைமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இத்தகவல் உண்மையாகும் பட்சத்தில் தனுஷ் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் 4 வதுமுறையாக இசையமைக்கவுள்ளார். இவர்கள் கூட்டணியில் வெளியான 'வடசென்னை', 'கர்ணன்', 'ஜகமே தந்திரம்' ஆகிய படங்களின் பாடல்களும், பின்னணி இசையும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

actor dhanush director arun matheswaran santhosh narayanan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe