Advertisment

ஹிப் ஹாப் ஆதியால் தமிழ் கற்ற மஸ்கட் மாணவி

muscat student learnt tamil through hip hop aadhi albums

ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் ஏ.ஆர்.கே.சரவன் இயக்கத்தில் சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'வீரன்'. கதாநாயகியாக அதிரா ராஜ் நடிக்க வில்லனாக வினய் ராய் நடித்துள்ளார். மேலும் முனீஷ்காந்த், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசை பணிகளை ஹிப் ஹாப் ஆதியே கவனித்துள்ளார்.

Advertisment

இப்படம் கடந்த 2ஆம் தேதி வெளியான நிலையில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. குறிப்பாக சூப்பர் ஹீரோ சப்ஜெஸ்ட் என்பதால் குழந்தைகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. அதனால் குழந்தைகளுக்கென சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. அதில் கலந்துகொண்ட குழந்தைகளை வீரன் பட சூப்பர் ஹீரோ கெட்டப்பில் வந்து ஹிப் ஹாப் ஆதி மகிழ்வித்தார். பின்பு அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு உரையாடினார். அப்போது ஒரு மாணவி ஆதியை பார்த்ததும் எமோஷனலாக கண்கலங்கிவிட்டார்.

Advertisment

பின்பு தான் ஒரு தீவிர ஆதி ரசிகர் என்றும் அவரின் ஆல்பம் மற்றும் படங்களைப் பார்த்து தான் தமிழ் கற்றுக்கொண்டதாக ஆதியிடம் தெரிவித்தார். அம்மாணவி கூறுகையில், "என்னுடைய சொந்த ஊர் பெங்களூரு. தமிழ் தான் எனது தாய் மொழி. ஆனால் மஸ்கட்டில் வளர்ந்ததால் தமிழ் பேச வராது. ஆதியின் ஆல்பம் மற்றும் தமிழ் மொழியின் ஆவணப்படம் ஆகியவற்றை பார்த்து 1 வருடத்தில் தமிழ் கற்றுக்கொண்டேன். அதற்கு ஆதி உத்வேகமாக இருந்தார்" என்றார்.

hiphop adhi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe