லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'விஜய்' மற்றும் 'விஜய் சேதுபதி' ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. ‘பேட்ட’ புகழ் மாளவிகா மோகனன் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் சாந்தனு, ஆண்ட்ரியா, கௌரி கிஷன், அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், விஜய் அடுத்ததாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்காக ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
இப்படத்தை இயக்க பல்வேறு இயக்குநர்களுக்கிடையே போட்டி நடைபெற்றுவரும் நிலையில், இப்படத்தை இயக்க தற்போது இயக்குனர் முருகதாஸிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும், அதில் முருகதாஸுக்கு‘தர்பார்’ படத்தில் கொடுக்கப்பட்ட சம்பளத்தைஇப்படத்தில் எதிர்ப்பார்க்க முடியாது என்றும், இதற்கு முருகதாஸ் ஓகே என்றால் அடுத்தக்கட்ட பேச்சு வார்த்தையைதொடரலாம்என்று தயாரிப்பு நிறுவனத்தின்தரப்பில் அவரிடம் கூறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் எல்லாம் சரிவர அமைந்தால் விஜய்யின் அடுத்த படத்தை முருகதாஸ் இயக்கவேஅதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.