Skip to main content

விஜயகாந்துக்கு ரமணா கொடுத்த முருகதாஸ், ரஜினிக்கு ஏன் தர்பார் கொடுத்தார்?

Published on 10/01/2020 | Edited on 10/01/2020

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இருந்தாலும் படம் பார்த்தவர்கள் இந்த படம் ரஜினி  பட ஸ்டைலிலேயே இருக்கிறது, முருகதாஸ் பட ஸ்டைலில் இல்லை என்று சொல்கின்றனர். 
 

rajni

 

 

அது என்ன முருகதாஸ் ஸ்டைல் என்று கேட்கிறீங்களா? உதாரணத்துக்கு துப்பாக்கி படத்துல இருந்து ஒரு சீன் பார்க்கலாம். ஒரே நேரத்தில் மும்பைக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்துவதற்கு கட்டளையை எதிர்பார்த்திருக்கும் 12 ஸ்லீப்பர் செல்களை  12 இராணுவ வீரர்களும் பின் தொடர்ந்து ஷூட் செய்யும் காட்சிதான். படத்தில் இது மிகவும் நீளமான ஒரு காட்சிதான் ஆனாலும் விறுவிறுப்புக்கும், ரியலிஸத்திற்கும் பஞ்சமே இருக்காது. நாயகன், இண்டெலிஜண்டாக சிந்தித்து செயல்படுத்தும் ஒரு ஐடியாவாக இருக்கும் அந்த காட்சி. இதே போன்ற இண்டெலிஜெண்டான காட்சி ரமணா படத்தில் மருத்துவமனை காட்சி இருக்கும். கத்தி படத்தில் ஏரி பைப்பில் வயதான விவசாயிகள் உள்ளே இறங்கி போராடும் காட்சி. 

இதுபோல தன்னுடைய படங்களின் திரைக்கதைகளில் சுவாரஸ்யமான ஐடியாக்களை சேர்த்திருப்பார். முருகதாஸின் முதல் படமான தீனாவுக்கு பின்னர் அவர் சாதாரண முயற்சியாக எடுத்தது இல்லை. கண்டிப்பாக ஒவ்வொரு படத்திலும் ஒரு புதுமை, வித்தியாசம், பிரில்லியன்ஸ் தெரியும். ஆனால், இப்போது அவர் ரஜினியை வைத்து இயக்கியிருக்கும் தர்பார், ரஜினி ஸ்டைல் மசாலா படம் என்பது பலரின் கருத்து.

தர்பாரில் சண்டைக் காட்சிகள் மிகவும் கற்பனையாகவே இருந்தது. துப்பாக்கியுடன் இருக்கும் 100 பேரை ரஜினி கத்தியை வைத்துக்கொண்டு காலி செய்வதுபோன்ற காட்சியெல்லாம் இருக்கிறது. தியேட்டர்களில் ரஜினி ரசிகர்கள் கொண்டாடும்படி இருந்தாலும் இதுபோன்ற காட்சிகள் நெருடலாக இருக்கிறது. 
 

vijayakanth

 

 

2002ல் முருகதாஸ் தனது இரண்டாவது படமான ரமணாவை தொடங்கியபோது வந்த போஸ்டரே இது வழக்கமான விஜயகாந்த் படம் இல்லை என்பதை சொல்வது போல இருந்தது. அதேபோல படம் வெளியானதும் மேலும் ஆச்சரியத்தை தந்தது. பொதுவாகவே நூறு ஆட்கள் நின்றாலும் தன்னுடைய லெஃப்ட் லெக்காலேயே உதைத்து துவம்சம் செய்பவராக, கரண்ட்டுக்கே ஷாக் கொடுப்பவராக என சூப்பர் ஹீரோவாகவே நடித்த விஜயகாந்த்தை அமைதியான பேராசிரியராக, காலால் டீல் செய்யாமல் கண்ணாலேயே டீல் செய்பவராகக் காட்டியிருந்தார் முருகதாஸ். க்ளைமேக்ஸில் அவர் பேசும் நீண்ட வசனம் கூட, மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. இந்தப் படம் அப்போதைய மாணவர்கள், இளைஞர்களிடம் விஜயகாந்தை கொண்டுசென்று அவரது அரசியல் எண்ட்ரீக்கும் உதவியது. மாஸ் மசாலா ஆக்‌ஷன் படங்களில் நடித்துக்கொண்டிருந்த விஜய்க்கும் கூட முதல் க்ளாஸ் ஆக்‌ஷன் படமாக முருகதாஸின் துப்பாக்கி அமைந்தது.

இப்படி நாயகர்களை தன் பாதைக்குத் திருப்பிய முருகதாஸ், தர்பார் படத்தில் ரஜினியை தன் ஸ்டைலில் இயக்குவார் என்று எதிர்பார்த்தவர்களை ஏமாற்றி, முழுக்க முழுக்க ரஜினி ஸ்டைலில் சண்டைக் காட்சிகளில் பறக்கவிட்டிருந்தார். ஆங்காங்கே சில ஐடியாக்கள் இருந்தாலும் முழுவதுமாக ஒரு ரஜினி படமாகவே இருந்தது ‘தர்பார்’. சர்காரும் ஏமாற்றம் அளித்த நிலையில் தர்பார் பார்த்தவர்கள் முருகதாஸிடம் இந்த மாற்றம் ஏனோ என வியக்கிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஏ.ஆர். முருகதாஸ் - சிவகார்த்திகேயன் பட அப்டேட்

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
sivakarthikeyan ar murugadoss movie update

சிவகார்த்திகேயன் தற்போது கமல்ஹாசன் தயாரிக்கும் அமரன் படத்தில் நடித்து வருகிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்க ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். தமிழக ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் காஷ்மீரில் கொல்லப்பட்ட சம்பவத்தை வைத்து உருவாகும் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இதனிடையே ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23வது படத்திலும் நடித்து வருகிறார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் நடிக்கிறார். அனிருத் இசைப்பணிகளை மேற்கொள்கிறார். படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் பூஜையுடன் தொடங்கியது.

முதற்கட்ட படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கி பாண்டிச்சேரியில் நடந்து வருவதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் சிவகார்த்திகேயன் வித்தியாசமான லுக்கில் தோன்றுகிறார்.

Next Story

அடுத்த படத்திற்கு தமிழ் இயக்குநரைத் தேர்ந்தெடுத்த சல்மான் கான்

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
salman khan next with ar murugadoss

ரஜினியின் தர்பார் படத்தை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிவகார்த்திகேயனின் 23ஆவது படத்தை இயக்கி வருகிறார் ஏ.ஆர் முருகதாஸ். இப்படத்தில் ருக்மணி வசந்த் கதாநாயகியாக நடிக்க அனிருத் இசையமைக்கிறார். படப்பிடிப்பு கடந்த மாதம் பூஜையுடன் தொடங்கி முழு வீச்சில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இந்த படத்தை அடுத்து ஏ.ஆர் முருகதாஸ், பாலிவுட்டில் சல்மான் கானை வைத்து படமெடுக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாமல் இருந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ளது. பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான அமீர் கான், அக்‌ஷய் குமார் உள்ளிட்ட ஹீரோக்களை இயக்கிய ஏ.ஆர் முருகதாஸ் மற்றொரு முன்னணி நடிகரான சல்மான் கானை இயக்கவுள்ளார். இப்படம் குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ஏ.ஆர்.முருகதாஸ், “மறக்க முடியாத சினிமா அனுபவத்திற்கு தயாராகுங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.  

முதல் முறையாக இருவரும் கூட்டணி வைத்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தை தயாரிப்பாளர் சஜித் நதியாத்வாலா தயாரிக்கிறார். அடுத்த ஆண்டு ரமலான் பண்டிகையை முன்னிட்டு இப்படம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சல்மான் கான், கடைசியாக டைகர் 3 படத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த ஆண்டு நவம்பரில் வெளியானது. இதையடுத்து விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக 1 வருடத்திற்கும் மேலாக தகவல் உலா வந்து கொண்டிருக்கிறது. ஆனால், அப்படம் குறித்த அப்டேட் இன்னும் வெளியாகாத சூழலில் சர்ப்ரைஸாக ஏ.ஆர் முருகதாஸ் பட அறிவிப்பு வெளியாகியுள்ளது.