Skip to main content

“நாங்கள் தேர்தல் அறிக்கையில் அதைத்தான் சொல்லியிருக்கிறோம்...” -தயாரிப்பாளர் முரளி

Published on 23/11/2020 | Edited on 23/11/2020

producer council

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர்-ஜானகி கல்லூரியில் காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. நீதியரசர் ஜெயச்சந்திரன் தலைமையில் தேர்தல் நடைபெற்றது.

தலைவர் பதவிக்கு டி.ராஜேந்தர், தேனாண்டாள் ஃபிலிம்ஸ் முரளி, பி.எல்.தேனப்பன் ஆகிய 3 பேர் போட்டியிடுகிறார்கள். இவர்களில் பி.எல்.தேனப்பன், எந்த அணியையும் சேராமல் தனியாகவே களம் இறங்கினார்.

இந்த தேர்தலில் 26 பதவிகளுக்கு நிர்வாகிகள் போட்டியிடுகிறார்கள். இன்றைய தேர்தலில் 1303 பேர் ஓட்டுப்போட தகுதி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டு இருந்தனர். இவர்களில் 1050 பேர் மட்டுமே ஓட்டு போட்டனர். கமல்ஹாசன், எஸ்.வி.சேகர், டி.ராஜேந்தர், சமுத்திரக்கனி, சிவகார்த்திகேயன், குஷ்பு, பூர்ணிமா பாக்கியராஜ் உள்ளிட்ட திரையுலக முக்கிய பிரமுகர்களும் நேற்று ஓட்டுப்போட்டனர்.

இதற்கு முன்பு நடைபெற்றுள்ள தயாரிப்பாளர் சங்க தேர்தல்களில் வாக்குப்பதிவு முடிந்த சில மணி நேரங்களிலேயே முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த தேர்தலில் நேற்று பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று காலையிலிருந்து எண்ணப்பட்ட ஓட்டுகளில் தேனாண்டாள் ஃபிலிம்ஸ் முரளி வெற்றிபெற்றுள்ளார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட டி.ராஜேந்தரை விட 220 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றிபெற்றுள்ளார் முரளி. 

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த முரளி பேசுகையில், “ஓட்டுப் போட்ட அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 1,050 வாக்குகளைப் பதிவு செய்து மிகப்பெரிய எழுச்சியை உருவாக்கி இருக்கிறார்கள். சங்கத்தில் நிறைய நல்ல விஷயங்கள் நடக்க வேண்டும் என்று நம்பி வாக்களித்துள்ளனர். இதில் எனக்கு 557 வாக்குகள் அளித்து என்னை வெற்றிபெற வைத்துள்ளனர்.

முதல் வேலையாகத் தேங்கிக் கிடக்கும் படங்களை வெளியிடும் முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளோம். நிதி நிலைமையைப் பார்த்து நலத்திட்ட உதவிகளைத் தொடங்க வேண்டும். நிறைய தயாரிப்பாளர்கள் அதை எதிர்நோக்கியுள்ளனர். குறுகிய கால மற்றும் நெடுங்காலத் திட்டங்கள் குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறோம்.

வி.பி.எஃப் கட்டணத்தைப் பொறுத்தவரையில் முழுமையாக விலக்கு கேட்கவுள்ளோம். நாங்கள் தேர்தல் அறிக்கையில் அதைத்தான் சொல்லியிருக்கிறோம். அதன் பேச்சுவார்த்தையை உடனே தொடங்கவுள்ளோம். ஏனென்றால் நிறைய படங்கள் வெளியீட்டுக்குக் காத்திருக்கின்றன. நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம் தொடர்பாக விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி, அதன் முடிவுகளை அறிவிப்போம்” என்றார். 

சார்ந்த செய்திகள்

Next Story

தயாரிப்பாளர் சங்க தேர்தல்: வெற்றிபெற்ற குழு  பணியாற்றக் கூடாது!!! -பாரதிராஜா

Published on 01/12/2020 | Edited on 01/12/2020
bhrathi raja

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது. தலைவர் உட்பட மொத்தம் 26  பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், தயாரிப்பளார் சங்க தலைவராக  தேனாண்டாள் ஃபிலிம்ஸ் முரளி வெற்றிபெற்றுள்ளார். மேலும் மற்ற பதவிகளுக்கும் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்த நிலையில் நடப்பு தயாரிப்பாளர் சங்க தலைவர் பாரதிராஜா, தமிழ் திரைப்பட தயரிப்பாளர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், முடங்கிப்போன தயாரிப்பாளர் சங்க நிர்வாகம் சீரமைக்கப்பட்டு முடுக்கி விடப்பட வேண்டும் என கூறியுள்ள பாரதிராஜா, வெற்றி பெற்றவர்கள் பணியாற்றக்கூடாது. தீவிர செயலாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு நீண்ட முடக்கத்திற்குப் பின் தேர்தல் நடைபெற்றதை வரவேற்கிறேன். தயாரிப்பாளர்கள் இணைந்து ஓட்டளித்ததில் மகிழ்ச்சி. எப்போதும் நம்மை நாம் ஆள்வது அவசியம். அப்போதுதான் உள்ளவர்களின் தேவையை உணர்ந்து பணியாற்ற முடியும். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தைப் பொருத்தவரை நிறைய சவால்கள் முன் நிற்கின்றன. இடைப்பட்ட காலங்களில் முடங்கிப் போன நிர்வாகம் சீரமைக்கப்பட்டு முடுக்கி விடப்பட வேண்டும். எனவே, தேர்தலில் வெற்றி பெற்ற குழு பணியாற்றக்கூடாது. தீவிர செயலாற்ற வேண்டும். 

திரு.  முரளி இராம நாரயணன் அவர்களின் தலைமைக்கு வாழ்த்துகள். வெற்றி பெற்ற அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் எனது வாழ்த்துகள். என்ன வாக்குறுதிகள் சொல்லி வந்தீர்களோ அவற்றை நிறைவேற்றப் போராடுங்கள். சங்கம் மீண்டும் துளிர்த்தெழட்டும். தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக வெற்றி பெற்ற உங்களனைவரையும் வாழ்த்தி மகிழ்கிறோம்" என அவர் கூறியுள்ளார். 

Next Story

டி.ஆர். தோல்வி... யாருக்கு வெற்றி??? தேர்தல் முடிவுகள் வெளியீடு...

Published on 23/11/2020 | Edited on 23/11/2020

tamil cinema producer council election result

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர்-ஜானகி கல்லூரியில் காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. நீதியரசர் ஜெயச்சந்திரன் தலைமையில் தேர்தல் நடைபெற்றது.

தலைவர் பதவிக்கு டி.ராஜேந்தர், தேனாண்டாள் ஃபிலிம்ஸ் முரளி, பி.எல்.தேனப்பன் ஆகிய 3 பேர் போட்டியிடுகிறார்கள். இவர்களில் பி.எல்.தேனப்பன், எந்த அணியையும் சேராமல் தனியாகவே களம் இறங்கினார்.

இந்த தேர்தலில் 26 பதவிகளுக்கு நிர்வாகிகள் போட்டியிடுகிறார்கள். இன்றைய தேர்தலில் 1303 பேர் ஓட்டுப்போட தகுதி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டு இருந்தனர். இவர்களில் 1050 பேர் மட்டுமே ஓட்டு போட்டனர். நடிகை குஷ்பு, எஸ்.வி.சேகர், டி.ராஜேந்தர், சமுத்திரக்கனி உள்ளிட்ட திரையுலக முக்கிய பிரமுகர்களும் நேற்று ஓட்டுப்போட்டனர்.