Published on 23/06/2018 | Edited on 24/06/2018

சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாற்று படமாக உருவாகியிருக்கும் 'சஞ்சு' படம் வரும் ஜூன் 29ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. தற்போது 'சஞ்சு' படத்தின் ரிலீஸில் பிஸியாக இருக்கிறாராம் ராஜ்குமார் ஹிரானி. அடுத்ததாக 'முன்னாபாய் எம்பிபிஎஸ்' படத்தின் மூன்றாம் பாகத்தையும் இயக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2003ஆம் ஆண்டு வெளியான இப்படம் மாபெரும் வெற்றி பெற்றதையடுத்து இதன் இரண்டாம் பாகம் 'லெஹராஹோ முன்னாபாய்' கடந்த 2006ஆம் ஆண்டு வெளியாகி இதுவும் மாபெரும் வெற்றிபெற்றது.
இதில் 'முன்னாபாய் எம்பிபிஎஸ்' படம் தமிழில் கமல் நடிப்பில் 'வசூல் ராஜா எம்பிபிஎஸ்' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இதையடுத்து ராஜ்குமார் ஹிராணி இயக்கிய '3 இடியட்ஸ்' படத்தின் இரண்டாம் பாகமும் தயாராவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை தமிழில் 'நண்பன்' என்ற பெயரில் ஷங்கர் ரீமேக் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.