எஸ்.எஸ்.பி ஆர்ட்ஸ் மூவிஸ் சார்பில் எஸ்.கோபால் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வாங்க படம் பார்க்கலாம்’. அறிமுக நாயகன் ஜிஜி மற்றும் அறிமுக நாயகி கமலி நடிப்பில் கே.எஸ்.நேசமானவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் லிவிங்ஸ்டன், முத்துக்காளை, கிரேன் மனோகர், நெல்லை சிவா, லொள்ளுசபா உதயா, கருணா ராதா, சேலம் ஜெய், கும்தாஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அப்போது விழாவில் கலந்துகொண்ட நடிகர் முனீஸ்காந்த் பேசும்போது... "சினிமாக்காரன் என்கிற படத்தில் இருந்து எனக்கு இயக்குனர் நேசமானவனை நன்கு தெரியும். வாய்ப்பு தேடி அலைந்த காலங்களில் ஒரு குடும்ப உறுப்பினர் போல எனக்கு வாய்ப்பு தந்ததோடு நியாயமான சம்பளத்தையும் கையோடு கொடுத்து அனுப்புவார். அந்த நன்றிக்காக தான் இந்த விழாவில் நான் கலந்து கொண்டுள்ளேன்” என நெகிழ்ந்தார்.