Advertisment

மூன்று முடிச்சி போட்ட முனீஸ்காந்த் !

munishkanth

தமிழ் சினிமாவில் முண்டாசுப்பட்டி படம் மூலம் முனிஸ்காந்த் என்று பிரபலமானவர் நகைச்சுவை நடிகர் ராமதாஸ். அதன் பின் தனது பெயரை முனிஸ்காந்த் என மாற்றிக் கொண்ட அவர் தொடர்ந்து பல படங்களில் ஒப்பந்தமாகி நகைச்சுவை காட்சிகளில் ரசிக்கும்படியாக நடித்து புகழ் பெற்றார். இவர் நடிப்பில் வெளிவந்த ஜிகர்தண்டா, இன்று நேற்று நாளை, பசங்க 2, டார்லிங் 2, மாநகரம், மரகத நாணயம், வேலைக்காரன், குலேபகாவலி, கலகலப்பு-2 உள்ளிட்ட படங்கள் இவருக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது. இந்நிலையில் முனிஸ்காந்த்துக்கும்,தேன்மொழி என்பவருக்கும் சென்னை வடபழனி முருகன் கோவிலில் வைத்து இன்று திருமணம் நடந்தது. நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்ட இத்திருமணம் வெகு விமர்சையாக நடைபெற்றது. மேலும் இவர் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்ற நிலையில் திரையுலகினர் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

Advertisment
Ramadoss munishkanth
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe