ஓடிடியில் வெளியாகும் விஜய் சேதுபதியின் இந்தி படம்

mumbaikar movie releasing directott platform

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான 'மாநகரம்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிய லோகேஷ் கனகராஜ், இன்று தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் அந்தஸ்திற்கு உயர்ந்துள்ளார்.

‘மாநகரம்’ படம், தற்போது ‘மும்பைகர்’ என்ற பெயரில் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இப்படத்தை இயக்கிவருகிறார். விக்ராந்த் மாசே,தன்யா மாணிக்டலா, ஹ்ரிது ஹரூன், சஞ்சய் மிஸ்ரா ஆகியோர் படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதில் நடிகர் விஜய் சேதுபதி முனீஸ்காந்த் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சமீபத்தில் படத்தின் படப்பிடிப்பை நிறைவுசெய்த படக்குழு,இறுதிக்கட்ட பணியில் தீவிரம் காட்டிவருகிறது.

இந்நிலையில் 'மும்பைகர்' திரைப்படம் நேரடியாக நெட்ஃபிளிக்ஸ் மற்றும் ஜியோ ஓடிடி தளத்தில் வெளியாகவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்தஅறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

actor vijay sethupathi maanagaram mumbaikar
இதையும் படியுங்கள்
Subscribe